பதிவு செய்த நாள்
16 பிப்2017
06:05

மும்பை : குரூப்எம் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த ஆண்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்ட வகையில், 55,671 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன; இது, இந்தாண்டு, 10 சதவீதம் அதிகரித்து, 61,204 கோடி ரூபாயாக உயரும். கடந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட, விளம்பர செலவினங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக, நுகர்பொருள், சில்லரை விற்பனை, தொலை தொடர்பு, மின்னணு வர்த்தகம் போன்ற துறைகளில், மதிப்பீட்டை விட, விளம்பரங்களுக்கு செலவு செய்வது குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட, பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாகவும், நிறுவனங்களின் விளம்பரச் செலவுகள் குறைந்தன. 2016 அக்., – டிச., வரையிலான காலாண்டில், நிறுவனங்களின் விளம்பரச் செலவின வளர்ச்சி, 2 சதவீதம் பின்னடைவைக் கண்டுள்ளது. இந்தாண்டு, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப விளம்பரங்களுக்கான செலவினம், 30 சதவீதம் அதிகரித்து, 9,490 கோடி ரூபாயாக உயரும். ‘டிவி’ விளம்பரங்களுக்கு, 27,378 கோடி ரூபாய் செலவிடப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|