பதிவு செய்த நாள்
17 பிப்2017
04:47

மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது: ‘ஆர்ஜியோ’ மொபைல் போன் சேவையை துவக்கிய போது, குறுகிய காலத்தில், 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்கை, சில மாதங்களிலேயே விஞ்சுவோம் என, நாங்களே எதிர்பார்க்கவில்லை.
ஆதார் அடிப்படையில், வாடிக்கையாளர்களை சேர்த்ததும், இந்த விரைவான வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு, 10 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்க்க முடிந்தது. இது, தொலை தொடர்பு துறையில், இதுவரை கேட்டறியாத சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.
ரிலையன்ஸ் குழுமம், அதன் ஊழியர்களுக்கு மட்டும், 2015, டிச., 27ல், ஆர்ஜியோ மொபைல் போன் சேவையை, இலவசமாக வழங்கத் துவங்கியது. இதையடுத்து, 2016, செப்., 5ல், நாடு முழுவதும், இலவசமாக, ‘4ஜி’ மொபைல் போன் சேவை அறிமுகமானது. இந்த இலவச சேவை, வரும், மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, டிசம்பர் இறுதி நிலவரப்படி, ஆர்ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 7.24 கோடியாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|