பதிவு செய்த நாள்
26 பிப்2017
01:18

மும்பை: இண்டியாபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், உள்நாட்டில், ஆயுள் காப்பீட்டு துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.விசாகா கூறியதாவது:எங்கள் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், இதுவரை, தனிநபர் பிரீமியம் மூலம், 285 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 90 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு முடியும் போது, தனிநபர் பிரீமியம், 350 கோடி ரூபாயை தாண்டும். இந்த நிதியாண்டில், இதுவரை, 1,750 கோடி ரூபாயை, பிரீமியம் வருவாயாக ஈட்டியுள்ளது. இது, அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ள முழு ஆண்டில், 2,000 கோடியாக அதிகாரிக்கும் என, தெரிகிறது. தற்போது, 29 சொந்த கிளைகள் உள்ளன. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். இணையதளம் வாயிலாகவும், காப்பீடுகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|