‘பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 6,000 கோடி டாலரை தாண்டும்’‘பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 6,000 கோடி டாலரை தாண்டும்’ ... பண தட்டுப்பாடு நீங்கியதால் வாகன கடன் வசூல் உயர்வு; ‘கிரிசில்’ நிறுவனம் ஆய்வறிக்கை பண தட்டுப்பாடு நீங்கியதால் வாகன கடன் வசூல் உயர்வு; ‘கிரிசில்’ நிறுவனம் ... ...
முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்கள் என்ன ஆயிற்று?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2017
23:48

தமி­ழக பட்­ஜெட்­டில் உள்ள அம்­சங்­களை வர­வேற்­றுள்ள தொழில் துறை­யி­னர், முத­லா­வது சர்­வ­தேச முத­லீட்­டா­ளர் மாநாட்டு ஒப்­பந்­தங்­கள் என்ன ஆயிற்று; நிதிப் பற்­றாக்­கு­றையை, எப்­படி சமா­ளிக்­கப் போகி­றோம் என, கேள்வி எழுப்­பி­உள்­ள­னர்.
மெட்­ராஸ் தொழில் வர்த்­தக சபை­யான, எம்.சி.சி.ஐ., துணைத் தலை­வர் காயத்ரி ஸ்ரீராம்: சரக்கு மற்­றும் சேவை வரி அம­லா­க­வுள்ள நிலை­யில், எதிர்­பார்த்­த­ப­டியே, புதிய வரி விதிப்­பு­கள் இல்லை. எனி­னும், கடந்த பட்­ஜெட்­டில் அறி­வித்து, துவக்­கப்­ப­டாத பல திட்­டங்­களை, செயல்­ப­டுத்­து­வது மிக­வும் முக்­கி­யம். மின் துறை, கட்­ட­மைப்பு போன்­ற­வற்­றுக்கு நிதி ஒதுக்­கீடு திருப்­தி­யாக இருந்­தா­லும், எண்­ணுார் – மணலி சாலை மேம்­பாட்­டுத் திட்­டம், மது­ர­வா­யல் மேம்­பா­லத் திட்­டம் போன்ற, தாம­த­மாகி வரும் திட்­டங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் தரப்­ப­ட­வில்லை.
நிதிப் பற்­றாக்­கு­றை­யும் பெரும் கவலை தரு­வ­தாக உள்­ளது. இதி­லி­ருந்து, அரசு எப்­படி மீளப் போகி­றதோ தெரி­ய­வில்லை. இரண்­டா­வது முத­லீட்­டா­ளர் மாநாடு நடக்­கும் என, அறி­வித்­தி­ருப்­பது மகிழ்ச்சி. எனி­னும், முத­லா­வது மாநாட்டு ஒப்­பந்­தங்­கள் என்ன ஆயிற்று என்­பதை, அறி­விப்­பது அவ­சி­யம். ஒற்றை சாளர முறை­யில் அனு­மதி என்­பது, நடை­மு­றை­யில் ஏற்­கும் வகை­யில் செயல்­ப­டுத்த வேண்­டும். தொழில் துறை­யி­ன­ரு­டன் அடிக்­கடி பேச வேண்­டும்.
சி.ஐ.ஐ., எனும், இந்­திய தொழில் கூட்­ட­மைப்பு, தமி­ழக தலை­வர் ரவிச்­சந்­தி­ரன்: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்­டங்­க­ளுக்கு, 1,400 கோடி ரூபாய் ஒதுக்­கி­யி­ருப்­பது சிறப்பு. மெட்ரோ ரயில் விரி­வாக்­கம், கட்­ட­மைப்பு வச­திக்கு, அதிக நிதி ஒதுக்­கீடு, ஒற்றை சாளர முறை பலப்­ப­டுத்­து­தல் போன்­ற­வற்றை வர­வேற்­கி­றோம். இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு பயிற்­சிக்கு, 150 கோடி ரூபாய் ஒதுக்­கி­யி­ருப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது.இவ்­வாறு அவர்­கள் கூறி­யுள்­ள­னர்.
மேலும், கிண்டி சிறு தொழில் பேட்டை சங்­கத் தலை­வர் கன­காம்­ப­ரம், தேசிய சிறு­தொ­ழில் கூட்­ட­மைப்பு துணைத் தலை­வர் ஆர்.ரவி ஆகி­யோர், பட்­ஜெட்­டில் சிறு, குறுந்­தொ­ழில்­க­ளுக்கு, 532 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்கு, பாராட்டு தெரி­வித்து உள்­ள­னர்.
– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)