பதிவு செய்த நாள்
19 மார்2017
03:50

புதுடில்லி: மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், லோக்சபாவில் கூறியதாவது:கடந்த, 2016 டிச., 31 நிலவரப்படி, மூடப்பட்ட மற்றும் கடனை திரும்பச் செலுத்தாத விமான நிறுவனங்களால், பொதுத் துறை வங்கிகளுக்கு, 6,769 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மூடப்பட்ட விமான போக்குவரத்து நிறுவனங்களிடம் இருந்து, நிலுவைத் தொகையை வசூலிக்க, வங்கிகள்நடவடிக்கை எடுத்து வருகின்றன. அது போல, கடனை திரும்பச் செலுத்த தவறிய விமான சேவை நிறுவனங்களிடம் இருந்தும், நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மூடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு, முறைகேடாக கடன் வழங்கியதில், வங்கி உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிகள், தவறு செய்த அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுத்து வருகின்றன. வங்கி விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு, சட்டப்படி தண்டனைவழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|