தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் திட்ட செலவுகளை சமாளித்தது எப்படி?தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் திட்ட செலவுகளை சமாளித்தது எப்படி? ... சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் வீட்டு பட்ஜெட்டை எளிதாக்கும் வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2017
03:55

பட்ஜெட் போட்டு செலவு செய்­வதன் முக்­கி­யத்­து­வத்தை, பலரும் உணர்ந்­தி­ருந்­தாலும், இதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது சவா­லா­கவே இருக்­கி­றது. பட்­ஜெட்­டிற்குள் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­தாமல், தடு­மா­று­வது தான், இதற்கு ஒரு காரணம். இதற்­காக, பட்­ஜெட்டை கைவிட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. மேலும், சிக்­க­லாக்கி கொள்­ளவும் வேண்டாம். பட்­ஜெட்டை எளி­மை­யாக்­கு­வதன் மூலம், இதை வெற்­றி­க­ர­மாக எதிர்­கொள்­ளலாம்.
சிக்கல் வேண்டாம்! பொது­வாக குடும்­பத்­திற்­கான பட்ஜெட் எனும் போது, வரு­மா­னத்தை பட்­டி­ய­லிட்டு, செல­வு­க­ளையும் பட்­டி­ய­லிட்டு, ஒவ்­வொரு செல­வுக்­கான பணத்தை ஒதுக்­கு­வது வழக்கம். செல­வு­களை தனித்­தனி பிரி­வு­களின் கீழ் வகைப்­ப­டுத்தி, அந்த பிரி­வு­க­ளுக்­கான தொகையை ஒதுக்­கிய பின், அதை மீறாமல் இருக்க, செல­வு­களை கண்­கா­ணித்து கொண்­டி­ருக்க வேண்டும். எல்லா வகை­யான செல­வு­க­ளையும் கவ­னத்தில் கொள்ளும் வகையில், பட்ஜெட் விரி­வாக அமைந்­தி­ருக்க வேண்டும்.
மூன்று பிரி­வுகள்விரி­வான பட்ஜெட் போடு­வது நல்­லது தான் என்­றாலும், செலவு வகை­களும், அவற்­றுக்­கான வரம்­பு­களும், குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தலாம். ஒரு சில பிரி­வு­களில் அதிகம் செல­வானால் மற்ற பிரிவில் துண்டு விழும். இதை தவிர்க்க, பட்ஜெட் செலவு வகை­களை, மூன்று பிரி­வு­க­ளாக பிரித்­துக்­ கொண்டால் போது­மா­னது. நிலை­யான செல­வுகள், மாறக்­கூ­டிய செல­வுகள், மாறக்­கூ­டிய செல­வு­களில் தவிர்க்க இய­லா­தவை என, மூன்று வித­மான பிரி­வுகள் போதும். வேறு எந்த குழப்­ப­மான பிரி­வு­களும் தேவை­யில்லை.
என்ன செல­வுகள் * நிலை­யான செல­வுகள்: மாத வாடகை அல்­லது வீட்டு கடன் தவணை, வாகன கடன், காப்­பீடு போன்ற செல­வுகள் நிலை­யா­னவை. சேமிப்பும் இந்த பிரிவில் தான் வரும்.* மாறும் செல­வுகள்: மாதா மாதம் மாறக்­கூ­டிய செல­வுகள். இவற்றை இரு பிரி­வாக பிரித்­துக்­கொள்ள வேண்டும். அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை மற்றும் தவிர்க்க கூடி­யவை. பில் கட்­டணம், துணி­ம­ணிகள், மளிகை பொருட்கள், தொலை­பேசி கட்­டணம் போன்­றவை, இதன் கீழ் வரும். அவ­சர கால நிதிக்­கான தொகையும் இதில் அடங்கும். * தவிர்க்க கூடி­யவை: கேபிள் கட்­டணம், பொழு­து­போக்கு செல­வுகள், வெளியே சாப்­பி­டு­வது, விடு­முறை செலவு போன்­றவை இதில் வரும்.

எது முக்­கியம்?இந்த மூன்று வகை­களை கவ­னிக்கும் போதே, செல­வு­களின் முக்­கி­யத்­து­வத்தை புரிந்து கொள்­ளலாம். முதல் ரகம் மற்றும் இரண்­டா­வது ரகம், தவிர்க்க இய­லாத செல­வுகள். வரு­மானம் மற்றும் பொறுப்­பு­க­ளுக்கு ஏற்ப, மூன்­றா­வது ரக செல­வு­களில் இழுத்­துப் ­பி­டித்தால் போது­மா­னது. இந்த முறையை கடை­பி­டிப்­பதன் மூலம், எதிர்­கா­லத்தில் எந்த அளவு சேமிப்­பது சாத்­தியம் என்­ப­தையும், அறிந்து கொள்­ளலாம். கடை­பி­டிக்­கவும் எளிது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)