பதிவு செய்த நாள்
25 மார்2017
01:54

மும்பை:‘நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், தயாரிப்புத் துறையில், தனியார் நிறுவனங்களின் லாப வளர்ச்சி அதிகரித்துள்ளது’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன் விபரம்:நடப்பு நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, 2,784 தனியார் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், நிதி சாரா துறையைச் சேர்ந்த, அந்நிறுவனங்களின் செலவினம் உயர்ந்துள்ள போதிலும், அவற்றின் லாப வளர்ச்சி அதிகரித்திருப்பது, தெரிய வந்துள்ளது. அவற்றின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 24.6 சதவீதம் அதிகரித்து, 53 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதில், தயாரிப்புத் துறை நிறுவனங்களின் நிகர லாபம், இதே காலத்தில், 57.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து, இதர சேவைகள் துறையின் விற்பனை வளர்ச்சி, பின்னடைவை கண்டுள்ளது. இத்துறை, தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக, இத்தகைய நிலையை சந்தித்து வருகிறது.முந்தைய காலாண்டை விட, மதிப்பீட்டு காலாண்டில், தயாரிப்பு நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம் உயர்ந்துள்ளது. அதே சமயம், பல்வேறு துறைகளில் பணியாளர் செலவினங்கள் குறைந்துள்ளன.
மதிப்பீட்டு காலாண்டில், இரும்பு, உருக்கு, பெட்ரோலியம் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சிறப்பாக செயல்பட்டு உள்ளன. அதன் காரணமாக, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாப வளர்ச்சி அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|