பதிவு செய்த நாள்
26 மார்2017
02:06

மும்பை : ‘‘இந்திய ரசாயன சந்தையின் மதிப்பு, 2020ல், 22,600 கோடி டாலராக உயரும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.அவர், மேலும் கூறியதாவது:கடந்த, 2015 நிலவரப்படி, சர்வதேச ரசாயன சந்தையின் மதிப்பு, 4.30 லட்சம் கோடி டாலராக உள்ளது. அதில், இந்திய ரசாயன சந்தையின் மதிப்பு, 14,700 கோடி டாலர் என்ற அளவிற்கு உள்ளது. இது, 2020ல், 22,600 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த இரு நிதியாண்டுகளாக, ரசாயன துறையின் ஏற்றுமதி, மதிப்பில் குறைந்துள்ள போதிலும், அளவில் அதிகரித்துள்ளது. 2014 – 15ம் நிதி ஆண்டில், ரசாயன ஏற்றுமதி, 1,266 கோடி டாலராக இருந்தது; இது, 2015 – 16ம் நிதியாண்டில், 7.8 சதவீதம் சரிவடைந்து, 1,167 கோடி டாலராக குறைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், அளவு அடிப்படையிலான ரசாயன ஏற்றுமதி, 7.51 சதவீதம் அதிகரித்து, 52.9 லட்சம் டன்னில் இருந்து, 56.90 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.ரசாயன துறையை ஊக்குவிக்கும் வகையில், வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரி, 5 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், புதிய வர்த்தக அடிப்படை கட்டமைப்பு ஏற்றுமதி திட்டமும், ரசாயன ஏற்றுமதியாளர்களின் பரிவர்த்தனை செலவுகளை குறைத்து, சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|