பதிவு செய்த நாள்
10 ஏப்2017
07:41
யூனிகார்ன் என, சொல்லப்படும் மெகா ஸ்டார்ட் அப்களை உருவாக்குவதில் இந்தியாவின் ஐ.ஐ.டி., உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.
பெரிய அளவிலான வளர்ச்சி வாய்ப்பை நோக்கமாக கொண்டு, சிறிய அளவில் துவக்கப்படும் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் என, பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் சந்தை மதிப்பாக, 100 கோடி டாலர்களுக்கு மேல் கொண்டுள்ள நிறுவனங்கள், ‘யூனிகார்ன்’ என, குறிப்பிடப்படுகின்றன.இந்த வகையான நிறுவனங்களை உருவாக்குவதில், ஐ.ஐ.டி., பட்டதாரிகள் உலகில், நான்காவது இடத்தில் உள்ளனர். ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்ற பின் தொழில்முனைவோர் ஆனவர்கள் இதுவரை, 12 மெகா நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். இந்த பட்டியலில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 51 மெகா நிறுவனங்களுடன் முதலிடம் வகிக்கிறது. ஹார்வர்டு மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் முறையே, 37 மற்றும் 18 மெகா நிறுவனங்களுடன், 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன. இந்த தகவலை பிரிட்டனின் சேஜ் எனும், மென்பொருள் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள், ஐ.ஐ.டி., பட்டதாரிகளால் உருவாக்கப்பட்டவையாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|