பதிவு செய்த நாள்
10 ஏப்2017
07:43

புதிய நிதி ஆண்டு துவங்கியிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நிதி செயல்பாடுகள் இவை:
நிதி திட்டமிடல், வரிச்சலுகைக்கான சேமிப்பு, முதலீடு உள்ளிட்ட விஷயங்களை, நிதி ஆண்டின் துவக்கத்திலேயே மேற்கொள்வது நல்லது. இதன் மூலம், ஆண்டு முழுவதும் நிதி விஷயங்கள் சீராக அமைவதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், கடைசி நேர அவசரத்தில் தவறான முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்கலாம்.
முதலில், உங்கள் முதலீடுகளில் மாற்றம் தேவையா என, ஆய்வு செய்வதிலிருந்து துவங்கலாம். கடந்த ஆண்டில் பங்குச்சந்தை மற்றும் பல்வேறு நிதி சாதனங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் உங்கள் முதலீட்டை ஆய்வு செய்ய வேண்டும். இந்த நிதியாண்டிற்கான கணிப்புகளையும் மனதில் கொள்ள வேண்டும். 2016 – 17ம் ஆண்டில் பங்குச்சந்தை, 18.5 சதவீதம் உயர்ந்து ள்ளதாகவும், கடன்சார் முதலீடுகள், 9 சதவீத பலனை அளித்துள்ளதாகவும், புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தங்கம் மீதான முதலீட்டின் பலன் எதிர்மறையாக அமைந்துள்ளது. இதற்கேற்ப உங்கள் முதலீடுகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
நிதி இலக்குநிதி முதலீடுகளை ஆய்வு செய்யும் போதே உங்கள் நிதி இலக்குகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். முதலீடுகள், உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ற பலன் தந்துள்ளனவா? என, பார்க்க வேண்டும். ஏதேனும் இடைவெளி இருந்தால், அதை ஈடு செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு இலக்கிற்குமான முதலீடு தரும் பலனையும் ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் சொந்த வீடு வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கான விலை அதிகரித்திருக்கலாம். அதற்கேற்ப உங்கள் சேமிப்பையும் அதிகமாக்க வேண்டும். சிறுசேமிப்பு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பி.பி.எப்., முதலீட்டிற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும் வி.பி.எப்., எனப்படும், வாலண்ட்டரி பிராவிடன்ட் பண்ட் மூலம், அதிக பலன் பெறலாம். வி.பி.எப்., கீழ், அதிக தொகை பிடித்தம் செய்யும்படி அலுவலகத்தில் கோரலாம்.
வரி திட்டமிடல்வரிச்சலுகைக்கான முதலீடு மற்றும் வரிச்சலுகை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பது போன்றவற்றை நிதி ஆண்டின் முடிவில் செய்து முடித்திருப்பீர்கள். ஆனால், வரி சேமிப்பு தொடர்பான திட்டமிடலை நிதி ஆண்டின் துவக்கத்திலேயே மேற்கொள்வது தான் சிறந்தது. இதன் மூலம், கடைசி நேரத்தில் அவதிப்படுவதை தவிர்க்கலாம். வரிச்சலுகைக்கான முதலீடுகளை மேற்கொள்ளும் போது, அவை நிதி இலக்குகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருப்பது அவசியம். கடைசி நேர அவசரத்தில் முதலீடு செய்யும் போது, இது சாத்தியமில்லாமல் போகலாம். எனவே, நிதி திட்டமிடுதலிலேயே வரி சேமிப்பையும், சேர்த்துக் கொள்ள வேண்டும். வரிச்சலுக்கைக்கான முதலீடுகளை தேர்வு செய்யும் முன், அவை நிதி இலக்கிற்கு ஏற்ற வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.
வரிச்சலுகை தவிர, முதலீட்டின் பலன், இடர்பாடு தன்மை மற்றும் லாக் இன் காலம் போன்றவற்றையும் மனதில் கொள்ள வேண்டும். வரிச்சலுகைக்காக இ.எல்.எஸ்.எஸ்., திட்டத்தை நாடுவதாக இருந்தால், எஸ்.ஐ.பி., மூலம் சேமிக்கத் துவங்கலாம். இளம் வயதினருக்கு இது ஏற்றதாக இருக்கும். பி.பி.எப்., மற்றும் என்.பி.எஸ்., திட்டங்களையும் பரிசீலிக்கலாம்.
என்.பி.எஸ்., திட்டம்என்.பி.எஸ்., எனும் தேசிய பென்ஷன் திட்டம் இப்போது ஈர்ப்பு மிக்கதாக மாறியிருக்கிறது. இதன் மீதான முதலீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரிச்சலுகையும் பெற முடியும். இது ஓய்வு காலத்திற்கான பாதுகாப்பு என்பதால், இந்த திட்டத்தில் இணைவது பற்றி அல்லது இதில் முதலீட்டை அதிகமாக்குவது பற்றி பரிசீலிக்கலாம். ஆதார் அட்டை இருந்தால், ஆன்லைன் மூலம் எளிதாக என்.பி.எஸ்., கணக்கை துவக்க முடியும். மற்ற சேமிப்புகளை அதிகமாக்க முடியுமா என்று பரிசீலிக்கலாம். ஊதிய உயர்வு கிடைத்திருந்தால் அல்லது அதற்கான வாய்ப்பு இருந்தால் அதற்கேற்ப சேமிப்பை அதிகமாக்க வேண்டும். எஸ்.ஐ.பி., மூலம் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து இருந்தால், தவணைத் தொகையை அதிகமாக்கலாம்.
அதே நேரத்தில் செலவுகளை குறைக்கும் வாய்ப்புகளையும் ஆராய வேண்டும். டி.டி.எச்., திட்டம், மொபைல் போனுக்கான திட்டம் போன்றவற்றை மாற்றி அமைத்து செலவை குறைக்கலாம். மூத்த குடிமகன்கள் எனில், வரி பிடித்தம் செய்யப்படுவதை தவிர்ப்பதற்கான, 15 எச் அல்லது, 15 ஜி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
நிதி ஆண்டின் துவக்கத்தில் திட்டமிடுவதன் மூலம்…
* கடைசி நேர அவசர முடிவுகளை தவிர்க்கலாம்* முதலீட்டை, 12 மாதங்களுக்கும் விரிவாக்கலாம்* நிதி இலக்கிற்கு ஏற்ற முதலீடுகளை செய்யலாம்* காப்பீடு பிரீமியம்களை ஒழுங்காக செலுத்தலாம்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|