பதிவு செய்த நாள்
11 ஏப்2017
02:51

புதுடில்லி : மத்திய அரசு, நிதிச் சந்தையில் கடன் பத்திர வெளியீடு உட்பட, பல்வேறு வழிகளில், தனக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்கிறது.
ரிசர்வ் வங்கி, மத்திய அரசு சார்பில், கடன் பத்திரங்களை வெளியிடுவது, இதர கடன்களை வாங்குவது, கடன்களை நிர்வகிப்பது உள்ளிட்ட பொறுப்புகளை, மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசு, கடன் விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை, தனி அமைப்பின் கீழ் கொண்டு வர முடிவு செய்து, பொது கடன் மேலாண்மை பிரிவு ஒன்றை, கடந்த ஆண்டு ஏற்படுத்தியது. அரசு கடன்கள் தொடர்பான ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வரும் இப்பிரிவை, அடுத்த ஆண்டு, இறுதிக்குள், தனி அமைப்பாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், அரசு கடன்களை நிர்வகிக்கும் பொறுப்பு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து புதிய அமைப்பிற்கு மாற உள்ளது. கடன் விகிதங்களை நிர்ணயிக்கும் அதிகார அமைப்பான ரிசர்வ் வங்கி, அரசு கடன்களையும் நிர்வகிப்பது சரியல்ல என்பதால், இத்தகைய மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|