பதிவு செய்த நாள்
11 ஏப்2017
02:53

புதுடில்லி : சமூக வலைதள விளம்பரங்கள், அதிகமானோரை சென்றடைகிற போதிலும், அவை, 20 – 45 வயதுள்ளோரை வசீகரிப்பதில் பின்தங்கியுள்ளன என்று, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சர்வதேச விளம்பர ஆய்வு நிறுவனமான, கன்டார் மில்வர்டு பிரவுன், இந்தியாவில், 50 வகையான விளம்பரங்களின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்: ‘டிவி’ விளம்பரங்கள், தலைமுறைகளை கடந்து, பாரபட்சமின்றி அனைவரையும் சென்றடைவதில், முதலிடம் வகிக்கின்றன. சமூக வலைதளங்களின் வீச்சும் அதிகம் உள்ளது என்ற போதிலும், ‘பிராண்டு’ பொருட்களின் விளம்பரங்களை பொருத்தவரை, அவற்றின் தாக்கம், 20 – 45 வயதினர் இடையே குறைவாக உள்ளது. அதேசமயம், 15 – 19 வயதினரிடம், ‘ஆன்லைன்’ வீடியோவை விட, சமூக வலைதள விளம்பரங்கள் அதிகம் சென்றடைகின்றன.எனினும், பிராண்டு பொருட்களை பொறுத்தவரை, சமூக வலைதளங்களை விட, ஆன்லைன் விளம்பரங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வீடியோ விளம்பரங்களின் வீச்சும், ‘பிராண்டு’ விளம்பரங்களின் தாக்கமும், மிக அதிகமாக உள்ளன. ஆன்லைன் பிராண்டு விளம்பரங்கள், 35 – 45 வயதினர் இடையே, மிகக் குறைந்த அளவிற்கே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய விளம்பர நிறுவனங்கள், கண்மூடித்தனமாக சமூக வலைதளங்களை மொய்க்காமல், பிராண்டுகளின் வளர்ச்சியில், அவற்றின் பங்களிப்பு குறித்து ஆராய வேண்டும்.
இந்தியாவின் ஊடக விளம்பர செலவினங்களில், டிஜிட்டல் ஊடகங்களின் பங்கு, 15 சதவீதமாக உள்ளது. இத்தகைய செலவினம், பிராண்டுகளுக்கு எந்த அளவிற்கு உதவுகிறது என, சிந்திக்க வேண்டும். அதேசமயம், நிறுவனங்கள், அவற்றின் பிராண்டு பொருட்களை பிரபலப்படுத்தவும், 35 – 45 வயதினரை கவரவும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் குறித்து மறுபரிசீலனை செய்வது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|