நிகர லாபம் ரூ.215 கோடி ரிலையன்ஸ் பவர் ஈட்டியதுநிகர லாபம் ரூ.215 கோடி ரிலையன்ஸ் பவர் ஈட்டியது ... கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனம் தாஜ் குழுமத்துடன் ஒப்பந்தம் கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனம் தாஜ் குழுமத்துடன் ஒப்பந்தம் ...
வணிக முத்திரை உரிமம் பெற அன்னிய நிறுவனங்கள் அதிக ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2017
02:01

புதுடில்லி : கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்­டில், வணிக முத்­திரை உரி­மம் கோரி, அன்­னிய நிறு­வ­னங்­கள் அளித்­துள்ள விண்­ணப்­பங்­கள், முந்­தைய நிதி­ஆண்டை விட, இரு மடங்கு உயர்ந்து, 15,670 ஆக அதி­க­ரித்­துள்­ளது.இதே காலத்­தில், காப்­பு­ரிமை, வடி­வ­மைப்பு, வணிக முத்­திரை, புவி­சார் குறி­யீடு ஆகி­ய­வற்­றுக்கு உரிமை கோரி, இந்­திய நிறு­வ­னங்­கள் அளித்­துள்ள விண்­ணப்­பங்­களின் எண்­ணிக்­கை­யும், 2.03 லட்­சத்­தில் இருந்து, 2.68 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. ஒட்­டு­மொத்த விண்­ணப்­பங்­களின் எண்­ணிக்கை, 34.5 சத­வீ­தம் உயர்ந்து, 2.83 லட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது.‘இது, அன்­னிய நிறு­வ­னங்­களின் இந்­திய முத­லீ­டு­கள் அதி­க­ரித்து வரு­வ­தை­யும், உள்­நாட்டு தொழில் துறை, மந்த நிலை­யில் இருந்து மீண்டு, எழுச்­சிப் பாதைக்கு திரும்­பு­வ­தை­யும் குறிப்­ப­தாக உள்­ளது’ என, பொரு­ளா­தார வல்­லு­னர்­கள் தெரி­வித்து உள்­ள­னர்.அழகு சாத­னங்­கள், மருந்­து­கள், ஆய்வு மற்­றும் மின் சாத­னங்­கள், எழுது பொருட்­கள், ஆடை­கள், குளிர்­பா­னங்­கள், விளம்­ப­ரங்­கள், வர்த்­தக நிர்­வா­கம் ஆகி­யவை தொடர்­பாக, அதிக காப்­பு­ரிமை விண்­ணப்­பங்­கள் குவிந்­துள்ளன.அதே சம­யம், மதிப்­பீட்டு காலத்­தில், புவி­சார் குறி­யீடு உரி­மம் கோரி வந்த விண்­ணப்­பங்­களின் எண்­ணிக்கை, 47லிருந்து, 17 ஆக குறைந்­துள்­ளது.இந்­தி­யா­வில், புவி­சார் குறி­யீடு, 2003 செப்­டம்­ப­ரில் அறிமுகமானது. ஒரு பகு­தி­யில், பல ஆண்­டு­க­ளாக பாரம்­ப­ரி­ய­மாக தயா­ரிக்­கப்­பட்டு வரும் பொருள், உற்­பத்தி செய்­யப்­படும் உணவு தானி­யங்­கள், கைவி­னைப் பொருட்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு, புவி­சார் குறி­யீடு வழங்­கப்­ப­டு­கிறது.இத்­த­கைய புவி­சார் குறி­யீடு பெற்ற பொரு­ளின் பெயரை, குறிப்­பிட்ட பகு­தி­யி­னர் தவிர, பிறர் பயன்­ப­டுத்த, சட்­டத்­தில் அனு­ம­தி­யில்லை.இந்­தி­யா­வில், புகழ் பெற்ற பாசு­மதி அரிசி, டார்­ஜி­லிங் தேயிலை, சந்­தேரி துணி, மைசூரு சில்க், குலு துப்­பட்டா, கங்ரா தேயிலை, தஞ்­சா­வூர் ஓவி­யங்­கள், காஷ்­மீர் வாதுமை மர கைவி­னைப் பொருட்­கள், பரு­கா­பாத் கை அச்சு சேலை­கள், அல­கா­பாத் சுர்கா கொய்யா உள்­ளிட்­ட­வற்­றுக்கு புவி­சார் குறி­யீடு வழங்­கப்­பட்டு உள்­ளது.
தொழில் பாது­காப்புஇந்­தி­யா­வில், உள்­நாட்டு நிறு­வ­னங்­களை விட, அன்­னிய நிறு­வ­னங்­கள் மற்­றும் அமைப்­பு­கள் தான், அதி­க­ள­வில் வணிக முத்­திரை காப்­பு­ரிமை பாது­காப்பு கோரு­கின்றன.டி.சி.ஜேம்ஸ், தேசிய அறி­வு­சார் சொத்­து­ரிமை அமைப்பு
விரை­வு­ப­டுத்த நட­வ­டிக்கைகடந்த மார்ச், 1 நில­வ­ரப்­படி, 2,47,824 காப்­பு­ரிமை விண்­ணப்­பங்­கள், பல்­வேறு நிலை­களில் நிலு­வை­யில் உள்ளன. காப்­பு­ரிமை விண்­ணப்­பங்­களை, விரை­வில் பைசல் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. காப்­பு­ரிமை விண்­ணப்­பங்­களை ஆய்வு செய்ய, கூடு­த­லாக, 400 ஆய்­வா­ளர்­கள் நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­னர். இவர்­களில், 396 பேர் பயிற்சி முடித்து, தற்­போ­துள்ள, 130 பேரு­டன் இணைந்து, ஆய்­வுப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.நிர்­மலா சீதா­ரா­மன், மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)