பதிவு செய்த நாள்
21 ஏப்2017
23:53

புதுடில்லி : பங்கு வர்த்தக விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தகைய நிறுவனங்கள் மீதான வழக்கை, ‘செபி’யின் கீழ் உள்ள, நீதி பிரிவு அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விசாரிக்கின்றனர்.
இந்த விசாரணை விபரங்களை, தினமும், தன் வலைதளத்தில் வெளியிட, ‘செபி’ முடிவு செய்துள்ளது. இது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, அவற்றின் வழக்கு தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள உதவும். அத்துடன், பங்கு முதலீட்டாளர்கள், தரகு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும், நிறுவனங்கள் மீதான விசாரணை விபரங்களை அறிந்து கொள்ளலாம். அவற்றின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ள முடியும்.
சமீபத்தில், பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு, ‘செபி’ வலைதளம் மேம்படுத்தப்பட்டது. இதன் மூலம், ‘லேப் – டாப், மொபைல் போன்’ போன்றவற்றிலும், வலைதளத்தை அணுகுவது சுலபமாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|