மியூச்­சுவல் பண்ட் முத­லீடுமியூச்­சுவல் பண்ட் முத­லீடு ... வராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரி இல்லா வரு­மானம் தரும் முத­லீட்டு வாய்ப்­புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2017
04:15

இந்த நிதி­யாண்­டிற்­கான வரி சேமிப்பு திட்­ட­மி­டலில் ஈடு­படும் போது, வரி சலு­கை­யுடன், வரி இல்லா வரு­மானம் தரும் இந்த முத­லீட்டு வாய்ப்­பு­களை பரி­சீ­லிக்­கலாம்.

முத­லீட்டு வாய்ப்­பு­களை தேர்வு செய்யும் போது, அவை தரும் பலன்­களை பரி­சீ­லிக்கும் போது, அவற்றின் மீதான வரி விதிப்­பையும் கவ­னத்தில் கொள்­வது அவ­சியம். வரி சேமிப்­பிற்­காக முத­லீடு செய்யும் போதும், இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், வரி விதிப்­பையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, முத­லீடு மீதான பலன் குறை­வதை உண­ரலாம். முத­லீட்டின் மீதான வரி விதிப்பு, முத­லீட்டின் நீண்ட கால பலன் மீதும் தாக்கம் செலுத்­தலாம். பொது­வாக, வரி சேமிப்­புக்கு திட்­ட­மிடும் போது, பலரும் தேசிய சேமிப்பு சான்­றிதழ், மூத்த குடி­ம­கன்­க­ளுக்­கான சேமிப்பு திட்டம் மற்றும் வரி சேமிப்­பிற்­கான ஐந்­தாண்டு வைப்பு நிதி உள்­ளிட்ட, முத­லீட்டு வாய்ப்­பு­களை நாடு­கின்­றனர்.
வரி விலக்குஇவை சேமிப்பை அளித்­தாலும், இவற்றின் மூலம் கிடைக்கும் வரு­மானம், ஒரு­வரின் வரு­மா­னத்தில் சேர்க்­கப்­பட்டு, அவ­ரது வரு­மான வரி வரம்­பிற்கு ஏற்ப வரிக்கு உட்­பட்­டது. ஆக, முத­லீடு செய்யும் ஆண்டில் வரி சேமிப்­புக்கு உத­வி­னாலும், அதன்பின், முத­லீடு காலம் வரை, இவற்றின் மீதான வரு­மானம் வரி சுமையை ஏற்­ப­டுத்­தலாம்.முத­லீடு மூல­மான வரு­மா­னத்தை சேர்த்த பின், வரு­மானம், வரு­மான வரி வரம்­பிற்கு உட்­பட்­டி­ருந்தால், வரி விதிப்பு இருக்­காது.
உதா­ர­ண­மாக, ஓய்வு பெற்ற ஒரு­வரின் வரு­மானம், லட்­சத்­திற்கும் குறை­வாக இருந்தால், 3 லட்சம் வரை, அவ­ருக்கு வரி விலக்கு வரம்பு இருப்­பதால் வரி செலுத்த வேண்டாம். ஆனால், மாத சம்­பளம் பெரும்­பா­லானோர், தங்கள் வரி வரம்­பிற்கு ஏற்ப, முத­லீட்டின் வரு­மானம் மீதும் வரி செலுத்தும் நிலை உண்­டா­கலாம். இத்­த­கைய முத­லீட்­டா­ளர்கள் வரிச்­ச­லு­கையை மட்டும் கருத்தில் கொள்­ளாமல், வரி இல்லா வரு­மா­னமும் அளிக்கக் கூடிய முத­லீட்டு வாய்ப்­பு­களை பரி­சீ­லிப்­பதே, பொருத்­த­மாக இருக்கும் என, வல்­லு­னர்கள் பரிந்­து­ரைக்­கின்­றனர்.
முத­லீடு மீதான வரி விதிப்­பிற்கு ஏற்ப, முத­லீட்டு சாத­னங்கள் வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இவற்றில், அனைத்து கட்­டங்­களிலும் வரிச்­ச­லுகை அளிக்கும் முத­லீ­டுகள் இ – இ – இ அந்­தஸ்­துடன் அமை­வதாக கரு­தப்­ப­டு­கின்­றன. அதா­வது, முத­லீடு மட்­டு­மின்றி, அதன் வரு­மானம் மீதும் வரிச்­ச­லுகை அளிப்­ப­வை­யாக இருக்­கின்­றன.
இ.எல்.எஸ்.எஸ்.,ஈக்­விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் (இ.எல்.எஸ்.எஸ்.,) மியூச்­சுவல் பண்ட்­களில் ஒரு வகை. வரி சேமிப்­பிற்­கான முத­லீ­டாக, இவை முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இதன் முத­லீடு, வரு­மான வரிச்­சட்டம் 80 சி பிரிவின் கீழ் விலக்­கிற்கு உரி­யது. இவை, 3 ஆண்டு லாக் இன் காலம் கொண்­டவை. பெரும்­பா­லான மியூச்­சுவல் பண்ட் நிறு­வ­னங்கள், இந்த வகை திட்­டங்­களை அளிக்­கின்­றன. இவற்றின் முத­லீட்டு பலன் உறுதி அளிக்­கப்­பட்­டது அல்ல. மாறாக, சந்­தையின் ஏற்ற, இறக்­கத்­திற்கு உட்­பட்­டவை. இவற்றில், டிவி­டெண்டு வாய்ப்பு அல்­லது வளர்ச்சி வாய்ப்பு நிதி­களை தேர்வு செய்­யலாம்.
இவை சம பங்கு சார்ந்­தவை என்­பதால், பெரும்­ப­குதி சம பங்­கு­களில் முத­லீடு செய்­யப்­ப­டு­கி­றது. நீண்ட கால முத­லீட்டு ஆதாயம் பூஜ்­ஜியம் ஆகும்; டிவி­டெண்­டிற்கும் வரி கிடை­யாது. ஒருவர் தன் நிதி நிலை மற்றும் இலக்­கு­க­ளுக்கு ஏற்ப, இந்த வகை திட்­டங்­களில் இருந்து தேர்வு செய்­யலாம். லாக் இன் காலம் முடிந்த பின்னும் கூட, நீண்ட கால பலனை கொண்டு முத­லீட்டை தொடர்­வது சிறந்­தது என, கரு­தப்­ப­டு­கி­றது.
பி.பி.எப்.,பல ஆண்­டு­க­ளாக, பி.பி.எப்., பிர­ப­ல­மான சேமிப்பு வழி­யாக அமைந்­துள்­ளது. இதில் செய்­யப்­படும் முத­லீட்­டிற்­கான பலன், அரசால் உறுதி அளிக்­கப்­ப­டு­வது. இதன் மீதான வரு­மா­னத்­திற்கும் வரி விலக்கு உண்டு. பி.பி.எப்., மீதான வட்டி வரு­மானம் தற்­போது, 7 சத­வீ­த­மாக இருக்­கி­றது. (காலாண்டு அடிப்­ப­டையில் மாற்றி அமைக்­கப்­ப­டு­கி­றது). நீண்ட கால நோக்கில், பாது­காப்பு அளிக்கும் முத­லீ­டாக அமை­கி­றது. இது, 15 ஆண்டு காலம் கொண்­டது. அதன்பின், 5 ஆண்டு அடிப்­ப­டையில் நீட்­டித்துக் கொள்­ளலாம். நிதி­யாண்டில் குறைந்­தது, 500 ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை முத­லீடு செய்­யலாம். இதே போல, தொழி­லாளர் சேம­நல நிதி­யான, பி.எப்., முத­லீடும் வரி விலக்கு கொண்­டது.மேலும், யூலிப்கள் எனப்­படும், யூனிட்­க­ளுடன் இணைக்­கப்­பட்ட காப்­பீடு திட்­டங்கள், வழக்­க­மான காப்­பீடு திட்­டங்கள் மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகி­ய­வையும், வரிச்­ச­லுகை கொண்ட வரு­மா­னத்தை அளிக்­கின்­றன.
வரி திட்­ட­மி­டலில் கவ­னிக்க வேண்­டி­யவை* வரி விலக்கு அளிக்கும் சாத­னங்கள் வரி இல்லா வரு­மா­னமும் கொண்­டி­ருப்­பது நல்­லது* வட்டி வரு­மானம் மீதான வரி விதிப்பு, முத­லீட்டின் பலனை குறைக்கும்* சரி­யான முத­லீட்டு சாத­னங்­களை தேர்வு செய்­வதன் மூலம், நல்ல பலன் பெறலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)