புதிய வணிக சின்னம்  ‘விப்ரோ’ அறிமுகம்புதிய வணிக சின்னம் ‘விப்ரோ’ அறிமுகம் ... 2.46 லட்சம் வாகனங்கள் டி.வி.எஸ்., விற்பனை 2.46 லட்சம் வாகனங்கள் டி.வி.எஸ்., விற்பனை ...
‘ஸ்நாப்டீல்’ விற்பனையில் இழுபறி நீடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2017
07:39

புது­டில்லி : பங்கு முத­லீட்­டா­ளர்­கள் இடையே, ஒரு­மித்த கருத்து எட்­டப்­ப­டா­த­தால், ‘ஸ்நாப்­டீல்’ நிறு­வ­னத்தை விற்­பனை செய்­வ­தில் இழு­பறி நீடிக்­கிறது.ஸ்நாப்­டீல், பல்­வேறு நிறு­வ­னங்­கள் தயா­ரிக்­கும் பொருட்­களை, அதன் வலை­த­ளம் மூலம், மக்­க­ளுக்கு விற்­பனை செய்து வரு­கிறது. டில்­லி­யைச் சேர்ந்த, குனால் பஹல், ரோஹித் பன்­சால் ஆகி­யோர், 2010ல், ஸ்நாப்­டீல் நிறு­வ­னத்தை துவக்­கி­னர். கடும் போட்டிஅதில், ஜப்­பா­னைச் சேர்ந்த, சாப்ட் பேங்க் உள்­ளிட்ட பல நிறு­வ­னங்­கள், பெரும் தொகையை முத­லீடு செய்­தன. இதை­ய­டுத்து, இந்­திய வலை­தள சந்­தை­யில், 650 கோடி டாலர் மதிப்­புள்ள நிறு­வ­ன­மாக, ஸ்நாப்­டீல் உரு­வெ­டுத்­தது.இந்­நி­லை­யில், ‘அமே­சான், பிளிப்­கார்ட்’ போன்ற நிறு­வ­னங்­களின் கடு­மை­யான போட்­டியை, ஸ்நாப்­டீல் சந்­தித்­தது. அதை சமா­ளிக்க, அதி­ரடி சலு­கை­கள், தள்­ளு­ப­டி­கள் போன்­ற­வற்றை வழங்­கி­யது. அத்­து­டன், ‘பிரீ­சார்ஜ்’ போன்ற, பிற துறை நிறு­வ­னங்­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தி­லும், ஸ்நாப்­டீல் ஆர்­வம் காட்­டி­யது. இது போன்ற கார­ணங்­க­ளால், ஸ்நாப்­டீல் கடு­மை­யான பொரு­ளா­தார சிக்­கலை சந்­திக்க நேர்ந்­தது.இதை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட சிக்­கன நட­வ­டிக்­கை­யால், ஏரா­ள­மா­னோர் வேலை­யி­ழந்­த­னர்; கைய­கப்­ப­டுத்­திய சில நிறு­வ­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டன. புதிய முத­லீ­டு­களை திரட்ட முடி­யாத நிலை ஏற்­பட்டு, ஸ்நாப்­டீல் மதிப்பு, 150 கோடி டால­ராக குறைந்­தது.விற்பனைக்கு எதிர்ப்புஇந்­நி­லை­யில், ஸ்நாப்­டீல் நிறு­வ­னத்தை, பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­திற்கு விற்க முடிவு செய்­யப்­பட்­டது. ஆனால், இயக்­கு­னர் குழு கூட்­டத்­தில், ஸ்நாப்­டீல் மதிப்பு குறைத்து நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ள­தா­கக் கூறி, அதில் முத­லீடு செய்­துள்ள கலாரி கேப்­பிட்­டல், நெக்­சஸ் வென்ச்­சர் பார்ட்­னர்ஸ் ஆகிய நிறு­வ­னங்­கள், விற்­ப­னைக்கு எதிர்ப்பு தெரி­வித்­தன. இத­னால், சுமுக முடிவு எடுக்க முடி­யா­மல் கூட்­டம் கலைந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)