பதிவு செய்த நாள்
10 மே2017
07:01

புதுடில்லி : பிரிட்ஜ் டு இந்தியா நிறுவனம், இந்திய சூரிய மின் உற்பத்தி கையேட்டை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு, இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திறன், கடந்த ஆண்டை விட, 76 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8.8 கிகா வாட், அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தாண்டு, சூரிய மின் உற்பத்திக்கான, போட்டோவோல்டிக் செல் சந்தையில், ஜப்பானை விஞ்சி, இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும். இந்தியாவின் சூரிய சக்தி உற்பத்தி திறன், இந்தாண்டு, 18.7 கிகா வாட் என்ற அளவை எட்டும். சூரிய மின்சக்தி துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிதாக, 56 கிகா வாட் அளவிற்கு, சூரிய மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு, சூரிய மின் உற்பத்தியில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அதிவேகமான வளர்ச்சியை கண்டு வருகின்றன. மொத்த சூரிய மின் உற்பத்தி திறனில், தென்னிந்தியாவின் பங்கு, 60 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|