பதிவு செய்த நாள்
13 மே2017
00:05

புதுடில்லி : டபிள்யு.டி.சி.ஏ., எனப்படும் உலக வர்த்தக மைய அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஸ்காட் பெர்குசன் கூறியதாவது: எங்கள் அமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில், 21 உலக வர்த்தக மையங்கள் அமைக்க, உரிமம் வழங்கியுள்ளோம். தற்போது, மும்பை, பெங்களூரு, புனே, நொய்டா, கொச்சின் ஆகிய ஐந்து இடங்களில், இம்மையங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பரப்பளவை பொறுத்தவரை, உலகளவில் மிகப்பெரிய மையம், நொய்டாவில், 44 ஏக்கரில் அமைகிறது. விரிதியான் குழுமம், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், பலதரப்பட்ட வணிக பயன்பாட்டிற்காக இந்த மையத்தை அமைத்து வருகிறது. இதுபோல, மேலும், 12 மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், 7 லட்சம் சதுர அடி பரப்பில், வணிகம் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி பிரமாதமாக உள்ளது.
மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சிக்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, சர்வதேச முதலீட்டு மையங்களின் தலைமையிடமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இங்கு, வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த ஆவலாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|