பதிவு செய்த நாள்
14 மே2017
02:16

புதுடில்லி : மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:கடந்த, 2004 – 05ம் ஆண்டின் அடிப்படையில், நாட்டின் மொத்த விலை குறியீடு கணிக்கப்பட்டு வந்தது. கால மாற்றத்திற்கு ஏற்ப, துல்லியமாக மொத்த விலை குறியீட்டை மதிப்பிடும் நோக்கில், அடிப்படை ஆண்டு, 2011 – 12 ஆக மாற்றப்பட்டுள்ளது.அத்துடன், மதிப்பீட்டிற்கான பொருட்கள் எண்ணிக்கையும், 676லிருந்து, 697 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இதில், இயற்கை எரிவாயு, டிஷ்யு பேப்பர், கன்வேயர் பெல்ட், ரப்பர் டிரெட், கேபிள், கோவக்காய், வெள்ளரி, பாகற்காய், பலாப்பழம் உள்ளிட்ட, 199 புதிய பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேசமயம், அப்பளம், வீடியோ ‘சிடி’ பிளேயர், இலகு டீசல், உயர் வகை நிலக்கரி உள்ளிட்ட, 146 பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன.சர்வதேச நடைமுறையை பின்பற்றி, மொத்த விலை குறியீட்டை மதிப்பீடு செய்வதில், மறைமுக வரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|