பதிவு செய்த நாள்
14 மே2017
02:16

மும்பை : இந்தியாவில், 2020ல், வாகன விற்பனையில், 70 சதவீத அளவிற்கு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு உயரும் என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.இது குறித்து, பெய்ன் அண்டு கம்பெனி மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:வாகன துறையில், தயாரிப்பு, விற்பனை, சேவை உள்ளிட்ட, அனைத்து பிரிவுகளிலும், டிஜிட்டல் எனப்படும் மின்னணு தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் இன்ஜினியரிங், 3டி பிரின்டிங், ஸ்மார்ட் சென்சார்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள், வாகன துறையின் அனைத்து துறைகளிலும், பரிமளிக்கத் துவங்கியுள்ளன.வரும், 2020ல், வாகன விற்பனையில், 70 சதவீதம், அதாவது, 4,000 கோடி டாலர் அளவிலான வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடைபெறும். இது, தற்போது, 1,800 கோடி டாலராக உள்ளது.இதே காலத்தில், இவ்வகை விற்பனையில், சமூக வலைதளங்களின் பங்கு, 20 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக உயர்ந்து, 2,300 கோடி டாலர் என்ற அளவை தொடும்.பெருகி வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு, இணைய இணைப்பு வசதிகள் போன்றவை, டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க துணை புரிந்து வருகின்றன. வாகன துறை வர்த்தகத்தில், ஸ்மார்ட்போன்களின் பங்கு, 80 சதவீதமாக இருக்கும்.வாகன உதிரிபாக நிறுவனங்கள், 10 – 11 சதவீத அளவிற்கே, டிஜிட்டல் வசதிக்கு முதலீடு செய்கின்றன. முகவர்கள், வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள, டிஜிட்டல் வசதியை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.வரும், 2020ல், வாகன பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புக்கு, டிஜிட்டல் வசதியை, 40 சதவீதம் பேர் நாடுவர்; 30 சதவீதத்தினர், வலைதளத்தில் வாகன உதிரிபாகங்கள் வாங்குவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|