பதிவு செய்த நாள்
19 மே2017
15:54
ஜம்மு : ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை க;ட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட விலை மற்றும் வரிவிதிப்பு நிர்ணயம் குறித்து விளக்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சேவைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ரயில், சாலை மற்றும் விமான சேவைக்கு 5% வரி. சிறிய உணவகங்களுக்க 5% வரி. ஏசி உணவகங்களுக்கு 18 % சேவை வரி. ஏசி அல்லாத உணவகங்களுக்கு 12 % மற்றும் மதுபான விற்பனை உரிமம் பெற்ற ஏசி உணவகங்களுக்கு 18 % வரி.
ஜிஎஸ்டி.,யின் கீழ் கேளிக்கை வரிகளும் சேவை வரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரும்பாலன சேவை வரிகள், முன்பு இருந்த முறையிலேயே தொடரும். ஜிஎஸ்டி.,யின் அடிப்படை அம்சங்கள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து விதமான சேவைகளுக்கும் 5%, 12%, 18%,28% (சொகுசு சேவைகள்) என 4 வகையாக வரி நிர்ணயம் செய்யப்பட்டு, வகைபடுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி.,யின் அடுத்த கூட்டம் ஜூன் 3 ம் தேதி நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|