பதிவு செய்த நாள்
03 ஜூன்2017
01:20
புதுடில்லி : சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில், கடந்த மே நிலவரப்படி, 421 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அவற்றில், 218 மண்டலங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவற்றிலும், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் அதிகம் உள்ளன. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் தகவல் தொழிற்நுட்பம் சார்ந்த சேவைகள் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளன.
இந்நிலையில், சுற்றுலா, ஊடகம், பொழுது போக்கு போன்ற, ஏற்றுமதி வாய்ப்பு அதிகமுள்ள துறைகளையும், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இணைப்பதற்கான முயற்சியை, மத்திய வர்த்தக அமைச்சகம் மேற்கொண்டு உள்ளது.இது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு, ஏற்றுமதி மேம்பாட்டு குழுவிடம், அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|