பதிவு செய்த நாள்
04 ஜூன்2017
02:03
புதுடில்லி: மொபைல் போன் சேவையில், அதிவேக தகவல் பதிவிறக்கத்தில், தொடர்ந்து நான்கு மாதங்களாக, ஆர்ஜியோ முதலிடத்தில் இருப்பதாக, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ தெரிவித்து உள்ளது.பார்தி ஏர்டெல், வோடபோன், ஆர்ஜியோ, ஐடியா செல்லுலார் உள்ளிட்ட நிறுவனங்கள், தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகின்றன.ஏப்., மாதத்தில், இந்நிறுவனங்களின் தகவல் பதிவிறக்க வேகம் குறித்த விபரத்தை, டிராய் வெளியிட்டு உள்ளது.அதில், ஆர்ஜியோ, சராசரியாக வினாடிக்கு, 19.12 எம்.பி., என்ற பதிவிறக்க வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. கடந்த நான்கு மாதங்களாக, அதிவேக தகவல் பதிவிறக்கத்தில், ஆர்ஜியோ, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.ஏப்ரலில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பதிவிறக்க வேகம், ஜன., – பிப்., – மார்ச் மாதங்களில், முறையே, 17.43 எம்.பி., 1௬.4௯ எம்.பி., மற்றும் 1௮.4௯ எம்.பி., என்றளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|