தொலை தொடர்பு துறை கடன் பாரத ஸ்டேட் வங்கி கவலைதொலை தொடர்பு துறை கடன் பாரத ஸ்டேட் வங்கி கவலை ... டுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதி டுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதி ...
இந்தாண்டு 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்கள் உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2017
02:26

சென்னை : ‘ஐ.டி., துறை­யில், லட்­சக்­க­ணக்­கா­னோர் வேலை இழப்­பிற்கு ஆளா­வர் என்­பது, மிகைப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்’ என, இன்­போ­சிஸ், டி.சி.எஸ்., நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன.இந்­நி­று­வ­னங்­கள், இந்­தாண்டு, தலா, 20 ஆயி­ரம் பேர் வீதம், 40 ஆயி­ரம் பேரை பணிக்கு தேர்வு செய்ய உள்ளன. சமீ­பத்­தில், ‘ஐ.டி., துறை­யில், ஆண்­டுக்கு, 2 லட்­சம் வீதம், அடுத்த மூன்று ஆண்­டு­களில், 6 லட்­சம் பேர் வேலை இழப்­பர்’ என, தக­வல் வெளி­யா­னது. அதற்­கேற்ப, இன்­போ­சிஸ், காக்­னி­ஸன்ட், விப்ரோ உள்­ளிட்ட நிறு­வ­னங்­களில், ஆட்­கு­றைப்பு நடை­பெ­று­வ­தாக கூறப்­பட்­டது.இதை­ய­டுத்து, பீதி­ய­டைந்த, ஐ.டி., பணி­யா­ளர்­கள், தொழிற்­சங்­கம் அமைப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட துவங்கி உள்­ள­னர்.இந்­நி­லை­யில், இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, யு.பி.பிர­வின் ராவ், மத்­திய மின்­னணு மற்­றும் ஐ.டி., துறை அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத்தை, டில்­லி­யில் சந்­தித்து பேசி­னார்.இதை­ய­டுத்து, அமைச்­சர் ரவி­சங்­கர் பிரசாத் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தில் உள்ள வேலை­வாய்ப்­பு­களை, பிர­வின் ராவ் எடுத்­துக் கூறி­னார். ஏற்­க­னவே, டாடா குழுமத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., நிறு­வ­னம், கடந்த மூன்று ஆண்­டு­களில், 2.50 லட்­சம் பேரை பணி­ய­மர்த்­தி­ய­தா­க­வும், இந்­தாண்டு கூடு­த­லாக, 20 ஆயி­ரம் பேரை பணிக்கு தேர்வு செய்ய உள்­ள­தா­க­வும் கூறி­யுள்ளது. இன்­போ­சிஸ், டி.சி.எஸ்., நிறு­வ­னங்­கள் தொடர்ந்து வல்­லு­னர்­களை தேர்வு செய்து வரு­கின்றன.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.இந்­நி­லை­யில், டி.சி.எஸ்., நிறு­வ­னத்­தின், சென்னை பிரி­வின் தலைமை அதி­கா­ரி­யும், இந்­தியா, மத்­திய கிழக்கு மற்­றும் ஆப்­ரிக்­கா­வின் வளர்ச்சி பிரிவு தலை­வ­ரு­மான, ரவி விஸ்­வ­நா­தன் கூறி­ய­தா­வது:ஒரு நிறு­வ­னம், ‘லே ஆப்’ என அறி­வித்­தால், எந்த வேலை­யும் இல்லை என, அர்த்­தம். அப்­ப­டிப்­பட்ட வேலை­யில்­லாத நிறு­வ­னம், கூடு­தல் பணி­யா­ளர்­களை தேர்வு செய்­யாது. ஐ.டி., துறை­யில் வேலை­யில்லை என்­பதே இல்லை. அது­வும் குறிப்­பாக, தற்­போது, டிஜிட்­டல், செயற்கை நுண்­ண­றிவு, இயந்­தி­ரங்­கள் இடை­யி­லான இணைய பயன்­பாடு போன்ற, புதிய தொழிற்­நுட்­பங்­கள் பெருகி வரு­வ­தால், ஐ.டி., துறை­யில் வேலை­யி­ழப்பு என்ற பேச்­சுக்கே இட­மில்லை.‘இந்­தாண்டு, ஐ.டி., துறை தான், அதி­க­பட்ச பணி­யா­ளர்­களை நிய­மிக்­கும்’ என, ‘நாஸ்­காம்’ அமைப்பு தெரி­வித்­துள்­ளது. உல­க­ள­வில், தொழிற்­நுட்­பத்­திற்­கான செல­வி­னம் குறைய வாய்ப்­பில்லை என்­ப­தால், ஐ.டி.,சேவை­களும், அவற்­றுக்­கான வல்­லு­னர்­களின் தேவை­யும் பெரு­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
மிகையான தகவல்ஐ.டி., துறை வேலை­யி­ழப்பு மிகைப்­ப­டுத்தி கூறப்­ப­டு­கிறது. கடந்த ஆண்டு, இன்­போ­சிஸ், 20 ஆயி­ரம் பேரை பணி­யில் சேர்த்­தது. இந்­தாண்­டும், இதே அள­வில் பணி­யா­ளர்­கள் சேர்க்­கப்­ப­டு­வர். பணித்­தி­றன் அடிப்­ப­டை­யில், ஆண்­டுக்கு, 300 – 400 பேர் பணி­யில் இருந்து விடு­விக்­கப்­ப­டு­வது, வழக்­க­மான நடை­முறை தான்.– யு.பி.பிர­வின் ராவ்,சி.இ.ஓ., இன்­போ­சிஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)