பதிவு செய்த நாள்
06 ஜூன்2017
01:17

புதுடில்லி : அயர்லாந்தைச் சேர்ந்த, ஐ.டி.ஏ., எனப்படும், தொழில் மேம்பாட்டு கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி, மார்ட்டின் டி ஷானஹான் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் வெளியேற உள்ள நிலையில், அங்குள்ள இந்திய நிறுவனங்கள், அயர்லாந்துக்கு தாராளமாக வர்த்தகத்தை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், அரசு செய்து தரும்.
இங்கு, புதிய தொழில்களை, 48 மணி நேரத்தில் துவக்கலாம். சிறந்த தொழிலாளர் சட்டங்கள், முதலீடுகளுக்கு நல்ல வருவாய், பாதுகாப்பான வர்த்தக சூழல்களை கொண்டதாக, அயர்லாந்து உள்ளது. நிதி சேவைகள், நுகர்வோர் பொருட்கள் வர்த்தகம், உயிரி அறிவியல், மருத்துவ தொழிற்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்திய நிறுவனங்களுக்கு அதிகளவில் வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்துறைகளில் முதலீடு செய்ய, இந்திய நிறுவனங்கள் முன்வர வேண்டும். அயர்லாந்தில் இருந்து, ஐரோப்பிய சந்தைகளுக்கு சுலபமாக வர்த்தகம் மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|