நொய்டா ஆலை விரிவாக்கம்; களமிறங்கும் சாம்சங் நிறுவனம்நொய்டா ஆலை விரிவாக்கம்; களமிறங்கும் சாம்சங் நிறுவனம் ... ஜிஎஸ்டி.,யால் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஜிஎஸ்டி.,யால் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ...
‘ஆன்­லைன்’ வங்கி துறை­யின் எழுச்­சி­யால் பாரம்­ப­ரிய வங்கி நடை­முறை வழக்­கொ­ழி­யும்: ‘நிடி ஆயோக்’ சி.இ.ஓ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2017
06:47

புதுடில்லி : ‘‘அடுத்த, 5 – 6 ஆண்­டு­களில், பாரம்­ப­ரிய வங்கி நடை­மு­றை­களை, ‘ஆன்­லைன்’ வங்கி துறை அழிக்க வாய்ப்பு உள்­ளது,’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதி­காரி அமி­தாப் காந்த் எச்­ச­ரித்து உள்­ளார்.

அவர், மேலும் கூறி­ய­தா­வது: என் மதிப்­பீட்­டின் படி, அடுத்த, 5 – 6 ஆண்­டு­களில், பாரம்­ப­ரிய வங்கி நடை­மு­றை­களின் அழிவை பார்க்­க­லாம். இவ்­வங்­கி­களின் செல­வி­னம் அதி­கம் என்­ப­தால், அவை நிலைத்­தி­ருப்­பது கடி­னம். இந்­தி­யா­வில் தற்­போது, நிதி தொழிற்­நுட்ப சேவை­யில், 900க்கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் உள்ளன. இவை, ஆண்­டுக்கு, 300 கோடி டாலர் டிபா­சிட்டை ஈர்க்­கின்றன.

போட்டி:
இத்­த­கைய நிதிச் சேவை நிறு­வ­னங்­கள், பாரம்­ப­ரிய வங்­கி­க­ளுக்கு கடும் போட்­டியை ஏற்­ப­டுத்தி உள்ளன. இந்­நி­று­வ­னங்­க­ளு­டன் ஒப்­பி­டும் போது, பாரம்­ப­ரிய வங்­கி­களின் செல­வி­னம் பல மடங்கு அதி­க­மாக உள்­ளது. தக­வல்­களை அலசி ஆரா­யும் ஆற்­றல் கார­ண­மாக, நிதி தொழிற்­நுட்ப, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளால், மிக சுல­ப­மாக கடன் வழங்க முடி­கிறது.

இதற்­கெல்­லாம் மூலா­தா­ர­மாக, வலை­தள தொழிற்­நுட்­பம் உத­வு­கிறது. இந்த வசதி மூலம், இந்­தியா, மிக எளி­மை­யான நடை­மு­றை­களை கண்­டு­ பி­டித்து, அமெ­ரிக்க தொழிற்­நுட்­பத் துறையை விட, பல மடங்கு முன்­னேற்­றம் கண்­டுள்­ளது. இத­னால், இந்­தி­யா­வில், 1 டாலர் செல­வில் ஒரு வாடிக்­கை­யா­ளரை ஈர்க்க முடி­கிறது. இது, அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­களில், 28 – 30 டால­ராக உள்­ளது.

மொபைல் போன் பயன்­பா­டும், வலை­த­ளம் வாயி­லான பரி­மாற்­றங்­களும் பெருகி வரு­வ­தால், நிதி தொழிற்­நுட்ப நிறு­வ­னங்­கள், மிக சுல­ப­மாக ஒரு­வ­ரின் கடன் தகுதி சார்ந்த தக­வல்­களை ஆராய்ந்து முடி­வெ­டுக்­கின்றன. நமக்கு தொழிற்­நுட்­பத்தை பயன்­ப­டுத்­தும் வல்­ல­மை­யும், தக­வல்­களை ஆரா­யும் திற­னும், கிரா­மங்­களில் நிதிச் சேவை­களை பர­வ­லாக கொண்டு போகும் ஆற்­ற­லும் உள்­ளது. இவை தான், நிதிச் சேவை தொழிற்­நுட்ப நிறு­வ­னங்­கள், வலை­த­ளம் சார்ந்த வங்கி சேவை­களை சிறப்­பாக மேற்­கொள்ள உத­வு­கின்றன. இந்த பலம் தான், புதிய நிறு­வ­னங்­களை, வங்கி சேவைக்கு ஈர்க்­கிறது.

உரிமம்:
கடந்த, 45 ஆண்­டு­களில், பாரம்­ப­ரிய வங்­கி­களை திறக்க, 28 உரி­மங்­கள் மட்­டுமே வழங்­கப்­பட்டு உள்ளன. தற்­போது, 18 மாதங்­களில், ‘பேமென்ட் பேங்க் – ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ எனப்­படும், வரை­ய­றைக்கு உட்­பட்ட இரு வகை­யான வங்கி சேவை­களை வழங்க, 21 உரி­மங்­கள் வழங்­கப்­பட்டு உள்ளன.அவற்­றில், ‘பார்தி ஏர்­டெல், இந்­தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க், பேடி­எம்’ ஆகி­யவை, பேமென்ட் பேங்க் பிரி­வின் கீழ் வங்கி சேவையை துவக்­கி­விட்­டன. ‘எக்­வி­டாஸ், உஜ்­ஜி­வன்’ உள்­ளிட்ட, 11 நிதி நிறு­வ­னங்­கள், ஸ்மால் பைனான்ஸ் பேங்க் பிரி­வில் கள­மி­றங்கி உள்ளன.

இது போன்ற, நிதி தொழிற்­நுட்ப நிறு­வ­னங்­களின் வரு­கை­யும், வலை­த­ளம் மூலம் குறைந்த செல­வில் சுல­ப­மாக மேற்­கொள்­ளும் பணப் பரி­வர்த்­தனை வச­தி­களும், வரும் ஆண்­டு­களில், பாரம்­ப­ரிய வங்கி துறைக்கு கடு­மை­யான சவாலை ஏற்­ப­டுத்­தும். இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)