23  சதவீத வளர்ச்சியை எட்டிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள்  23 சதவீத வளர்ச்சியை எட்டிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ... வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்! வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரிசர்வ் வங்­கி­யின் வட்டி விகித அறி­விப்பு: ஏமாற்­றம் அர­சுக்­கு­தான்; சந்­தைக்கு அல்ல!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
04:13

ரிசர்வ் வங்­கி­யின் சமீப வட்டி கொள்கை, அதன் சுயேச்­சை­யான நடத்­தைக்கு சிறந்த சான்று. ஆனா­லும், தொடர்ந்து ரிசர்வ் வங்­கி­யின் கொள்­கை­யின் மேல் அர­சின் கூர்ந்த கவ­னம் இருந்து கொண்டே இருக்­கும்.

ரிசர்வ் வங்­கி­யின் கொள்கை எப்­படி இருக்க வேண்­டும் என்ற தங்­க­ளது எதிர்­பார்ப்பை, வங்­கி­யின் ஆளு­ன­ருக்கு தனிப்­பட்ட முறை­யி­லும், பொது­வெளி அறி­விப்­பு­கள் மூல­மும், நிதி­ய­மைச்­ச­க­மும், தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­க­ரும் தொடர்ந்து அறி­வு­றுத்­தும் பழக்­கத்தை கடை­பி­டிக்­கின்­ற­னர்.வட்டி விகி­தத்­தில், என்ன மாற்­றம் ஏற்­பட வேண்­டும்; வங்­கி­களின் மேல், ரிசர்வ் வங்கி செலுத்­தும் மேலாண்மை மற்­றும் சீர­மைப்பு எப்­படி அமைய வேண்­டும் என்­ப­தில் தொடர்ந்து கருத்து பரி­மாற்­றங்­கள் நடந்து கொண்டே இருக்­கும். இந்த பரி­மாற்­றங்­கள் ஆரோக்­கி­ய­மா­னது என்­றா­லும், இதை, அதி­கார பார்­வை­யில்­தான் பொரு­ளா­தார நிபு­ணர்­கள் பார்க்­கி­ன்றனர். முத­லீட்டு உல­க­மும் அப்­படி பார்ப்­ப­து­தான் வழக்­கம்.

முரண்கள்
அரசு வட்டி விகி­தத்தை குறைக்க வேண்­டும் என்ற நிலைப்­பாட்டை பொது­வெ­ளி­யில் எடுத்த சூழ­லில், ரிசர்வ் வங்கி அதற்­கான சூழல் இன்­னும் ஏற்­ப­ட­வில்லை என்ற முடிவை எடுத்­தி­ருப்­பது, ரிசர்வ் வங்­கி­யின் சுதந்­திர போக்­கை­யும், நம் நாட்டு பொரு­ளா­தார அமைப்­பின் சிறப்­பை­யும் வெளிப்­ப­டுத்­து­கிறது. வட்டி விகி­தத்தை குறைத்­தால், அது பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு வித்­தி­டும் என்­பது அர­சின் நிலைப்­பாடு. ஆனால், வட்டி விகி­தத்தை குறைக்­கும் முடிவு, பண­வீக்­கத்­தின் மீது என்ன தாக்­கம் ஏற்­ப­டுத்­தும் என்­பதே இந்த முடிவை நிர்ண­யிக்­கும் என்­பது ரிசர்வ் வங்­கி­யின் பொறுப்­பான விளக்­கம். அது ரிசர்வ் வங்­கி­யின் முன்­னு­ரி­மை­யும் கூட. ஆனா­லும், தான் எடுக்­கும் முடிவை, எதன் அடிப்­ப­டை­யில் எடுத்­தது என்­பதை ரிசர்வ் வங்கி, முடிவை அறி­வித்­த­வு­ட­னேயே தெளி­வு­ப­டுத்­து­கிறது.

அர­சும் தன் தரப்பு கருத்தை உட­ன­டி­யாக பொது­வெ­ளி­யில் முன்­வைக்­கிறது. இதில் முரண்­கள் வெளிப்­ப­டு­வதை வைத்து, இரு­த­ரப்­புக்­கும் மோதல் என்று எடுத்­துக் கொள்­ளக்­கூ­டாது. ஏனெ­னில், ஒரு தரப்பு நிலைப்­பாடு சரி என்ற சூழல் பிறகு ஏற்­பட்­டால், மறு­த­ரப்பு அதை ஏற்­ப­தும் தொடர்­ ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தும் நம் நாட்­டின் நிதி மேலாண்­மை­யின் தனிச் சிறப்பு. இந்­தப் போக்கு, ரிசர்வ் வங்­கி­யின் தன்­னிச்­சை­யான செயல்­பாட்­டின் வெளிப்­பாட்­டிற்கு வழி வகுக்­கிறது. இது, ரிசர்வ் வங்கி ஒரு சுதந்­திர அமைப்பு என்­ப­தற்கு சான்­றும் கூட. இந்­த­முறை வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், பண­வீக்­கம் குறைந்து இருப்­ப­தும், அது உட­ன­டி­யாக மீண்­டும் தலை­துாக்­கும் சூழல் இல்லை என்­ப­தும் ரிசர்வ் வங்­கி­யின் தெளி­வான கணிப்பு. வரும் மாதங்­களில் பரு­வ­மழை சீராக, நாடு தழுவி பெய்­யும் சூழ­லில் ரிசர்வ் வங்கி தன் பண­வீக்க எதிர்­பார்ப்பை உறுதி செய்து கொள்­ளும். அந்த சூழ­லில், வட்டி விகித குறைப்பு ஏற்­பட வாய்ப்பு உள்­ளது.

நம்பிக்கை
சந்தை இதை தெளி­வாக உணர்ந்­துள்­ளது. ஆகவே, ரிசர்வ் வங்­கி­யின் முடிவு அர­சுக்கு மட்­டுமே ஏமாற்­றம் தந்­தது. சந்­தைக்கு எந்த ஏமாற்­ற­மும் இல்லை. சந்தை இந்த ஆண்டு வட்டி விகி­தத்தை குறைக்க வாய்ப்­பில்லை என்ற முடி­வுக்கு வந்­துள்­ளது. வரும் வாரங்­களில், சந்தை பரு­வ­ம­ழை­யின் போக்­கையே கூர்ந்து கவ­னிக்­கும். உலக சந்­தை­யின் நிகழ்­வு­களின் பாதிப்­பும் நம் சந்­தை­யில் தொடர்ந்து வெளிப்­படும். ஜி.எஸ்.டி., அம­லுக்கு வர சில வாரங்­களே உள்ள நிலை­யில், இந்த மாதம் பொரு­ளா­தா­ரம் சற்றே மந்­த­மா­கவே இருக்­கும். இருந்­தும், முத­லீட்­டா­ளர்­கள் நம் சந்தை மீது காட்­டும் அப­ரி­மி­த­மான நம்­பிக்கை தொட­ரும் என்றே தோன்­று­கிறது. சந்தை, உட­னடி பொரு­ளா­தார நிகழ்­வு­களை புறம் தள்­ளி­விட்டு, பெரிய மாற்­றங்­களை எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கிறது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூன் 12,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)