பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
23:52

புதுடில்லி : சஹாரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பை, ஐ.ஆர்.டி.ஏ., எனப்படும், காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் ஏற்றுக் கொண்டது.
உள்நாட்டில், சஹாரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 2016 – 17ம் நிதியாண்டில், 16 ஆயிரத்து, 58 பாலிசிதாரர்களிடம் இருந்து, 44.68 கோடி ரூபாயை, பிரீமியமாக வசூலித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., – மே மாதங்களில், 665 பாலிசிகளை விற்பனை செய்ததன் மூலம், 1.53 கோடி ரூபாய் பிரீமியம் திரட்டி உள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர், காப்பீடுதாரர்களுக்கு எதிராக ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறப்பட்டது. இதையடுத்து, ஐ.ஆர்.டி.ஏ., சஹாரா லைப் இன்சூரன்சின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அவற்றை நிர்வகிக்க, ஆர்.கே.மிஸ்ரா என்பவரை நியமித்துள்ளது.
இது குறித்து, ஐ.ஆர்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காப்பீட்டு சட்டம், 1938ன் கீழ், சஹாரா லைப் இன்சூரன்ஸ் பொறுப்புகளை, ஐ.ஆர்.டி.ஏ., ஏற்றுக் கொண்டது. இதன் மூலம், காப்பீடுதாரர்களுக்கு தரமான சேவை தரப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|