பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
23:53

புதுடில்லி : கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ் நிறுவனம், வீடு, வணிக வளாகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஜன., நிலவரப்படி, 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 51 கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் அனுமதி கேட்டு, வரைவு அறிக்கை தாக்கல் செய்தது. அதற்கு, ஒப்புதல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பங்குகளை வெளியிட்டு, 400 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. அந்த நிதி, நடைமுறை மூலதன செலவு உள்ளிட்ட பணிகளுக்கு செலவிடப்படும். ஆக்சிஸ் கேப்பிட்டல், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் உள்ளிட்டவை, பங்கு வெளியீட்டு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|