பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
23:54

புதுடில்லி : அடுத்த மூன்று மாதங்களில், பணி வாய்ப்பு வழங்குவது தொடர்பான நம்பிக்கையில், தென்னிந்திய நிறுவனங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன.
மேன்பவர் குரூப் இந்தியா நிறுவனம், சர்வதேச அளவில், வரும் ஜூலை – செப்., வரையிலான காலாண்டில், பணியாளர் தேர்வு குறித்த, நிறுவனங்களின் கருத்தை வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த, 4,910 நிறுவனங்கள் பங்கேற்றன. அவை, மதிப்பீட்டு காலாண்டில் பணியாளர் தேர்வு நடவடிக்கைகள் மந்தமாக இருக்கும் என, எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளன. தொடர்ந்து, ஆறு காலாண்டுகளாக, இதே கருத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மதிப்பீட்டு காலாண்டில், பணியாளர் தேர்வு குறித்த நம்பிக்கையில், தென்னிந்திய நிறுவனங்கள், 21 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளன. அடுத்த இடங்களில், வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிறுவனங்கள் முறையே, 15, 10 மற்றும் 9 சதவீதத்தை கொண்டுள்ளன. மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை, போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள் ஆகிய துறைகளில், பணியாளர் தேர்வு அதிகம் இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
தயாரிப்பு, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், மதிப்பீட்டு காலாண்டில் காணப்படும் நிலைமையை பொறுத்து, ஆட்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக கூறிஉள்ளன. சர்வதேச சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, இந்திய நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதில், பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக, ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
7வது இடம்:
ஜூலை – செப்., வரையிலான காலத்தில், வேலைவாய்ப்பில் மிகுந்த நம்பிக்கையுள்ள நாடுகளில், ஜப்பான் முதலிடத்திலும், இந்தியா, ஏழாவது இடத்திலும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|