பதிவு செய்த நாள்
01 ஜூலை2017
00:50

புதுடில்லி : உள்நாட்டில், அலுமினியம் உற்பத்தி மற்றும் விற்பனையில், பொதுத் துறை நிறுவனமான நால்கோ, முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தை, தனியார்மயமாக்க இருப்பதாக, தகவல் வெளியானது. ஆனால், இதை, மத்திய அரசு மறுத்துள்ளது.
இது குறித்து, மத்திய சுரங்க துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நால்கோவை தனியார்மயமாக்க இருப்பதாக, செய்திகள் வருகின்றன. மத்திய அரசின் நவரத்தினா அந்தஸ்து பெற்ற நிறுவனங்களில் ஒன்று நால்கோ. அதை, தொடர்ந்து சிறப்பாக நடத்துவற்கு, விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, மத்திய அரசு.
இதன் மூலம், அலுமினிய உற்பத்தியில், நால்கோ தொடர்ந்து முன்னணி நிறுவனமாக திகழும். ஒடிசாவில் உள்ள டாமன்ஜோடி என்ற இடத்தில், ஆண்டுக்கு, 10 லட்சம் டன் அலுமினியம் சுத்திகரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 5,540 கோடி ரூபாய் செலவிடப்படும். எனவே, நால்கோவை தனியார்மயமாக்கும் எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|