பதிவு செய்த நாள்
04 ஜூலை2017
04:57

துபாய் : ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் மொபைல் போன் சேவை குறித்து, ஜி.எஸ்.எம்.ஏ., நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: உலகளவில், 2020ல், புதிய மொபைல் போன் சந்தாதாரர்களில், 50 சதவீதத்தை, இந்தியாவும், சீனாவும் பங்கு போட்டுக் கொள்ளும். மதிப்பீட்டு காலத்தில், புதிய மொபைல் போன் சந்தாதாரர்களாக, மொத்தம், 75.30 கோடி பேர் இணைவர். அதில், இந்தியா, 27 சதவீத பங்களிப்புடன், 20.60 கோடி சந்தாதாரர்களை கொண்டிருக்கும். சீனா, 15.50 கோடி புதிய சந்தாதாரர்களை ஈர்க்கும்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், மொபைல் போன் சந்தாதாரர் வளர்ச்சிக்கு, இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இதற்கு, ‘4ஜி’ போன்ற நவீன தொழிற்நுட்ப வசதிகளின் அறிமுகமும் முக்கிய காரணமாகும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், ‘5ஜி’ தொழிற்நுட்பத்தில் தொலை தொடர்பு வசதிகளை, ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள் வழங்கத் துவங்கிவிடும். உலகிலேயே, இத்தகைய வசதி முதன்முறையாக, ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளில் தான் அறிமுகமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|