பதிவு செய்த நாள்
04 ஜூலை2017
04:58

மும்பை : பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூறியதாவது: ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ‘ஆர்ஜியோ’ நிறுவனம் மொபைல் போன் சேவை துறையில், வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. நீண்ட காலத்திற்கு இலவச மொபைல் போன் சேவையை வழங்கி, தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வரம்பை பதம் பார்த்து விட்டது.
வலுவான முதலீட்டில் களமிறங்கிய அந்நிறுவனம், நன்கு திட்டமிட்டு, அதிரடி செயல்பாடுகள் மூலம், வாடிக்கையாளர்களை வளைத்தது. இது, இதர மொபைல் போன் சேவை நிறுவனங்களின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த மார்ச்சுடன் முடிந்த காலாண்டில், 373 கோடி ரூபாயாக சரிவடைந்தது. இது, நான்கு ஆண்டுகளில் ஈட்டப்பட்ட மிகக் குறைந்த தொகையாகும்.
ஆர்ஜியோவின் சவாலை சமாளிக்கும் வகையில், பார்தி ஏர்டெல், சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதனால், நிறுவனம், விசுவாசமிக்க சந்தாதாரர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|