பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
22:38

புதுடில்லி : நாஸ்காம் மற்றும் அசெஞ்சர் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தியாவும், இஸ்ரேலும் தொழிற்நுட்ப பொருட்கள் மற்றும் சேவைகளில் தலைசிறந்து விளங்குகின்றன. அதனால், இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால், பரஸ்பர வளர்ச்சி காணலாம். குறிப்பாக, இரு நாடுகளும், வலைதளத்தில் புதுமையான தொழில் புரிவதற்கான, ‘ஸ்டார்ட் அப்’ துறையில், 2,500 கோடி டாலர் முதலீடு செய்தால், பல்வேறு துறைகளில், உலகத் தரத்திலான, 25 பொருட்களை உருவாக்கலாம். அவற்றின் மூலம், வரும், 2025க்குள், 2,500 கோடி டாலர் வருவாய் ஈட்டலாம்.இதற்கு, நன்கு திட்டமிட்ட செயல்பாடும், அமைப்பு சார்ந்த நடைமுறையும் அவசியம். இதன் வாயிலாக, இரு நாடுகளும், அவற்றின் வலிமையின் மூலம் பொருளாதார வளர்ச்சி காணலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பிரதமர் மோடி, இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|