4,000 பேருக்கு மைக்ரோசாப்ட் ‘கல்தா’4,000 பேருக்கு மைக்ரோசாப்ட் ‘கல்தா’ ... நுண்ணுாட்ட சத்து உணவு பொருட்களின் தர கட்டுப்பாட்டு விதிகள் மறுபரிசீலனை நுண்ணுாட்ட சத்து உணவு பொருட்களின் தர கட்டுப்பாட்டு விதிகள் மறுபரிசீலனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘விலை குறைவால் வாகன விற்பனை அதிகரிக்கும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2017
02:45

புது­டில்லி:ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி அம­லா­ன­தைத் தொடர்ந்து, கார் மற்­றும் இரு­சக்­கர வாகன நிறு­வ­னங்­கள் போட்டி போட்­டுக் கொண்டு விலை குறைப்பை அறி­வித்து வரு­கின்றன.இத­னால், வாகன துறை­யின் வளர்ச்சி, குறு­கிய காலத்­திற்கு சிறப்­பாக இருக்­கும் என, மகிந்­திரா அண்டு மகிந்­திரா நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர் பவன் கோயங்கா தெரி­வித்து உள்­ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது:எங்­கள் சப்­ளை­யர்­களில் ஒரு­வரை தவிர, அனை­வ­ரும் எதிர்­பார்த்­ததை விட, மிக சுமு­க­மாக, பழைய வரி விதிப்பு நடை­மு­றை­யில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறி விட்­ட­னர்.வாகன முக­வர்­கள், வழக்­க­மாக, ஆறு வாரங்­க­ளுக்கு தேவை­யான வாக­னங்­களை, கையி­ருப்­பில் வைத்­தி­ருப்­பர். அவர்­கள், கையி­ருப்பு வாக­னங்­களை, ஜி.எஸ்.டி., அம­லுக்கு முன் விற்­கும் நோக்­கில், தள்­ளு­படி சலு­கை­களை வழங்­கி­னர். இத­னால், அவர்­க­ளி­டம், ஒரு வார விற்­ப­னைக்­கான வாக­னங்­கள் மட்­டுமே உள்ளன.
தற்­போது, ஜி.எஸ்.டி., அம­லாகி விட்­ட­தால், முக­வர்­கள் அதி­க­ள­வில் வாக­னங்­களை கொள்­மு­தல் செய்­யத் துவங்­கு­வர். இத­னால், அடுத்த இரு மாதங்­களில், வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் விற்­பனை உய­ரும். அதை தொடர்ந்து, விழா மற்­றும் பண்­டிகை காலம் வரு­வ­தால், வாகன விற்­பனை சூடு­பி­டிக்­கும்.எனி­னும், பரு­வ­மழை, வாகன கட­னுக்­கான வட்டி, நாட்­டின் பொரு­ளா­தார சூழல் உள்­ளிட்ட அம்­சங்­களை பொறுத்தே, வாகன துறை­யின் வளர்ச்சி இருக்­கும். மஹா­ராஷ்­டிர அரசு, 2 சத­வீத சாலை வரி விதித்­தி­ருப்­பது சரி­யல்ல.
இதை, இதர மாநி­லங்­களும் பின்­பற்ற வாய்ப்பு உள்­ளது.‘ஹைபி­ரிட்’ எனப்­படும், கலப்பு எரி­சக்­தி­யில் இயங்­கும் கார்­க­ளுக்கு, 28 சத­வீத, ஜி.எஸ்.டி., மற்­றும் 15 சத­வீத கூடு­தல் வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது. இதை குறைக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)