பதிவு செய்த நாள்
16 ஜூலை2017
04:43

புதுடில்லி : சில தினங்களுக்கு முன், வலைதளம் ஒன்றில், ‘ஆர்ஜியோ’ வாடிக்கையாளர்களின் மொபைல்போன் எண்கள் மற்றும் விபரங்கள் கசிந்ததாக தகவல் வெளியானது.இதையடுத்து, ஆர்ஜியோ அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார், ராஜஸ்தானைச் சேர்ந்த, இம்ரன் சிப்பா என்ற சாப்ட்வேர் வல்லுனரை கைது செய்து, தகவல்களை வெளியிட்ட, ‘மேஜிகேப்க்’ வலைதளத்தை முடக்கினர்.இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தகவல் கசிந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, ஆர்ஜியோ நிறுவனத்தை, தொலைத்தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து, தொலைத்தொடர்பு துறை செயலர் அருண் சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தகவல் கசிவு குறித்து எங்களிடம் ஆர்ஜியோ புகார் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், அது தொடர்பான விபரங்களை வழங்குமாறு கேட்டுள்ளோம்,’’ என, தெரிவித்துள்ளார். இதனிடையே, வாடிக்கையாளர்களின் தகவல்கள் உயர்மட்ட பாதுகாப்புடன், பத்திரமாக உள்ளதாக, ஆர்ஜியோ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|