பதிவு செய்த நாள்
19 ஜூலை2017
06:17
புதுடில்லி : தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி.,யால், வாகனம், சிமென்ட் மற்றும் அமைப்பு சார்ந்த சில்லரை விற்பனை துறைகள் பயனடையும். ஆனால், எண்ணெய், எரிவாயு மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் துறைகள் பாதிப்படையும்.அதே சமயம், மின்சாரம், ரியல் எஸ்டேட், தொலை தொடர்பு, மருந்து மற்றும் உரத் துறைகளுக்கு, எவ்வித பாதிப்போ அல்லது பயனோ இருக்காது.
புதிய வரி திட்டத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக, அடுத்த, 12 மாதங்களுக்கு, இதை நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் இருக்கும். குறிப்பாக, பாரம்பரிய சில்லரை விற்பனை மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் துறைகள், புதிய வரி விதிப்புக்கு முழுமையாக மாறுவதில், இடர்ப்பாடுகளை சந்திக்க நேரிடும்.அனைத்து வர்த்தகமும், ஜி.எஸ்.டி.,யில் இணைந்து, மிகச் சிறிய நிறுவனங்களும் புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு முழுமையாக பழக வேண்டும். அதுவரை, பெரிய நிறுவனங்களுக்கு உள்ள சவால் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|