சிறிய நிறுவனங்களுக்கு ‘பந்தன்’ வங்கி அறிவுரை சிறந்த ஆடிட்டரை அமர்த்தினால் மிக சுலபமாக கடன் பெறலாம்சிறிய நிறுவனங்களுக்கு ‘பந்தன்’ வங்கி அறிவுரை சிறந்த ஆடிட்டரை ... ... மியூச்­சுவல் பண்ட் வளர்ச்­சி சிறிய நக­ரங்கள் முன்­னிலை மியூச்­சுவல் பண்ட் வளர்ச்­சி சிறிய நக­ரங்கள் முன்­னிலை ...
வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிக்க இதுவா வழி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2017
08:34

புதி­தாக வாங்­கிய காரு­டன், ‘போட்டோ’ எடுத்­துக் கொண்டு, முக­நுா­லில் பதி­வி­டு­ப­வரா நீங்­கள்? வெளி­நாட்டு பய­ணம் மேற்­கொண்டு, அங்கே எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை, ‘இன்ஸ்­டா­கி­ரா­மில்’ பதி­வேற்­று­ப­வரா? புதிய நகை­கள், வச­தி­களை பற்றி, சமூக ஊட­கங்­களில் பெருமை பேசு­ப­வரா? ஜாக்­கி­ரதை, உங்­களை, வரு­மான வரித்­து­றை­யின் வேவுக் கண் பார்த்­துக் கொண்­டி­ருக்­கிறது.
ஆம். மத்­திய அரசு மேற்­கொண்­டி­ருக்­கும் அடுத்த அதி­ரடி இது தான். பொது­வாக, இந்­தி­யா­வில் நேரடி வரி செலுத்­து­ப­வர்­களின் எண்­ணிக்கை மிக­வும் குறைவு. மொத்­த­முள்ள, 125 கோடி பேரில், 4 சத­வீ­தம் பேர் மட்­டும் வரி செலுத்­து­கின்­ற­னர். அதா­வது, 78 லட்­சம் பேர் மட்­டுமே, 5 லட்­சம் ரூபாய்க்கு மேல் வரு­வாய் ஈட்­டு­வ­தாக காண்­பித்து உள்­ள­னர். இதி­லும், 61 லட்­சம் பேர், மாத சம்­ப­ளக்­கா­ரர்­கள். சரக்கு மற்­றும் சேவை வரியை அமல்­ப­டுத்­து­வ­தன் மூலம், மறை­முக வரி செலுத்­து­வோ­ரின் எண்­ணிக்­கையை பல மடங்கு அதி­க­ரிப்­ப­தோடு, வரி வரு­வா­யை­யும் உயர்த்த முடி­யும் என்­பது, மத்­திய அர­சின் எண்­ணம்.

உஷாராகி விடும்இது எல்­லா­வற்­றை­யும்­விட, வரி ஏய்ப்­போர் எண்­ணிக்கை மிக அதி­கம் என்று கருத்து நில­வு­கிறது. இதற்கு ஒரு கணக்கு பின்­பற்­றப்­ப­டு­கிறது. மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யோடு, செலுத்­தப்­பட்ட வரியை ஒப்­பி­டும் விகி­தமே அந்த கணக்கு. மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 122 லட்­சம் கோடி ரூபாய்; ஆனால், திரட்­டப்­பட்ட வரி வரு­வாயோ, 16.97 லட்­சம் கோடி ரூபாய்; அதா­வது, 16.6 சத­வீ­தம். பிற வளர்ந்த நாடு­களில், இந்த விகி­தம் மிக அதி­க­மாக உள்­ளது. சீனா­வில், 19 சத­வீ­தம், பிரே­சி­லில், 35 சத­வீ­தம், ரஷ்­யா­வில், 19.5 சத­வீ­தம், அமெ­ரிக்­கா­விலோ, 35 சத­வீ­தம். பொரு­ளா­தார கூட்­ட­மைப்பு மற்­றும் வளர்ச்­சிக்­கான அமைப்­பைச் (ஓ.இ.சி.டி.,) சேர்ந்த, 21 நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும் போதும், நம் விகி­தம் குறை­வா­னதே.

இந்த சூழ்­நி­லை­யில், நம் வரி வரு­வாயை உயர்த்த, மத்­திய அரசு கொண்டு வர­வி­ருக்­கும் திட்­டத்­துக்கு பெயர், ‘புரா­ஜெக்ட் இன்­சைட்.’ 1,000 கோடி ரூபாய் செல­வில், ஏழு ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வந்த பின்­னணி தக­வல் சேக­ரிப்பு நடை­முறை இது. இதன்­படி, மக்­களின் பல்­வேறு தக­வல்­கள் சேக­ரிக்­கப்­பட்டு, ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­கின்றன. உதா­ர­ண­மாக, அவர்­க­ளு­டைய கடன் அட்டை, பற்று அட்டை, இணைய வணி­கம், மளிகை சாமான்­கள் வாங்­கு­வது, ஆடம்­ப­ரப் பொருட்­கள் வாங்­கு­வது, வெளி­நாட்டு பய­ணம் என, அனைத்து தக­வல்­களும் திரட்­டப்­ப­டு­கின்றன.
இதன்­பின், தனி­ந­பர்­களோ, நிறு­வ­னங்­களோ, தங்­கள் வரு­மான வரி­யைச் செலுத்­தும் போது, சந்­தே­கத்­துக்­கி­ட­மான வகை­யில், அவர்­கள் தங்­கள் வர­வு­களை குறைத்து காண்­பித்­தால், வரித்­துறை உஷா­ரா­கி­வி­டும். உடனே, கிடுக்­கிப்­பிடி தான். வரி ஏய்ப்­போ­ருக்கு நிச்­ச­யம், சிம்ம சொப்­ப­னம் தான் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.இதே போன்ற திட்­டம், இங்­கி­லாந்­தில், ‘கனெக்ட்’ என்ற பெய­ரில் நடை­மு­றை­யில் இருக்க, மற்ற நாடு­களும் இதை பின்­பற்­று­கின்றன. எல்­லா­ருக்­கும் வரி வரு­வாய் உயர்ந்­தி­ருக்­கிறது என்­பது தான், இந்­தி­யா­வின் நப்­பா­சை­யைத் துாண்டி­விட்­டி­ருக்­கிறது.

ஒப்பிட வேண்டும்ஆனால், அடிப்­ப­டை­யான சில கேள்­வி­கள் இங்கே தொக்கி நிற்­கின்றன. ஜி.டி.பி.,க்கும், வரி வரு­வாய்க்­கும் இடை­யி­லான விகி­தத்தை, எப்­படி புரிந்து கொள்ள வேண்­டும்? இதற்கு, இந்­தியா மற்­றும் ஓ.இ.சி.டி., நாடு­களின், 50 ஆண்­டு­கள் வளர்ச்­சியை ஒப்­பிட்­டுப் பார்க்க வேண்­டும். ஓ.இ.சி.டி., நாடு­கள் என்­பவை, பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­க­னவே வளர்ந்த நாடு­கள். அவற்­றின், ஜி.டி.பி., –வரி வரு­வாய் விகி­தம் அதி­க­மாக இருப்­ப­தில் ஆச்­ச­ரி­ய­மில்லை. அதை, நம் இந்­தி­யா­வுக்­கான அள­வு­கோ­லாக வைப்­ப­தில் தான் தவறு இருக்­கிறது.இதற்கு பதில், நம்­மு­டைய, ஜி.டி.பி., எவ்­வ­ளவு வேக­மாக வளர்ந்­துள்­ளது என்­பதை கணக்­கில் எடுத்­துக் கொள்­வதே சரி. 1965 – 1990 வரை­யான, முதல், 25 ஆண்­டு­களில், ஜி.டி.பி., – வரி வரு­வாய் விகி­தம், 10 – 16 சத­வீ­தம் வரை உயர்ந்த போது, நம், ஜி.டி.பி., 2.8 மடங்கு வளர்ந்­தது. 1990 – 2014 வரை­யி­லான கால கட்­டத்­தில், ஜி.டி.பி., – வரி வரு­வாய் விகி­தம் சரா­ச­ரி­யாக, 16 – 17 சத­வீ­த­மாக நிலை­பெற்று விட்­டது.

ஆனால், ஜி.டி.பி.,யோ இக்­கால கட்­டத்­தில், 4.5 மடங்கு வளர்ந்­துள்­ளது. வரி வரு­வாய்க்­கான சத­வீ­தம் அதே அளவு இருந்­தா­லும், நிச்­ச­யம் திரட்­டப்­பட்ட தொகை அதி­க­மா­கத் தானே இருக்க வேண்­டும்? வரி வரு­வா­யில் நேர்­முக வரி, மறை­முக வரி இரண்­டும் உண்டு. இந்­தி­யா­வில் இவ்­வி­ரண்டு வரி­களின் விகி­தம், தோரா­ய­மாக 35:65. இது, 50 ஆண்­டு­க­ளுக்கு முன், 13:87 என்ற விகி­தத்­தில் இருந்­தது. அங்­கி­ருந்து தான் படிப்­ப­டி­யாக, 35:65 ஆகி­யுள்­ளது. ஓ.இ.சி.டி., நாடு­களில் (அதா­வது வளர்ந்த பொரு­ளா­தார நாடு­களில்) இந்த விகி­தம், 67:33. 67 சத­வீ­தம் என்­பது, நேர்­முக வரி.

இந்­தி­யா­வும், இது போன்று நேர்­முக வரி வரு­வாயை அதி­க­ரிக்க வேண்­டும் என, முயற்சி எடுப்­ப­தன் தொடர்ச்­சியே, முக­நுா­லை­யும், இன்ஸ்­டா­கி­ரா­மை­யும் துழா­வு­வ­தில் வந்து முடிந்­தி­ருக்­கிறது. வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிப்­ப­தற்கு இது வழி­யல்ல. பெரு நிறு­வ­னங்­க­ளுக்கு கொடுக்­கப்­படும் வரிச் சலு­கை­களை கட்­டுப்­ப­டுத்தி, மானி­யங்­களை நெறிப்­ப­டுத்தி, செல­வு­களை குறைத்து, சிக்­க­னத்தை அதி­கப்­ப­டுத்தி, நிர்­வா­கத்தை மேம்­ப­டுத்­து­வதே, சரி­யான தீர்­வாக அமை­யும்.
-ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)