வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிக்க இதுவா வழி?வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிக்க இதுவா வழி? ... மியூச்­சுவல் பண்ட் வளர்ச்­சி சிறிய நக­ரங்கள் முன்­னிலை மியூச்­சுவல் பண்ட் வளர்ச்­சி சிறிய நக­ரங்கள் முன்­னிலை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தகவல் சுமை என்றால் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2017
08:38


உடல் ஆரோக்­கி­யத்­திற்­காக நொறுக்­குத்­தீனி போன்ற துரித உண­வு­களை தவிர்த்து, உணவு கட்­டுப்­பாட்டை பின்­பற்­று­வது போல, இணை­யத்தில் தக­வல்­களை பெறு­வ­திலும் கட்­டுப்­பாடு தேவை என்­கிறார் கிளே ஜான்சன். இதுபற்றி, ‘தி இன்­பர்­மேஷன் டயட்’ புத்­த­கத்தில் அவர் விவ­ரிக்­கிறார்.

எப்­படி நாம் உணவில் சர்க்­கரை, உப்பு, கொழுப்பு உள்­ளிட்ட சுவை­களால் ஈர்க்­கப்­ப­டு­கி­றோமோ அதே போல, நாம் நம்­மு­டைய நம்­பிக்­கைகள் தொடர்­பான ஆமோ­திப்பு மற்றும் உறு­தி­யையும் எதிர்­பார்க்­கிறோம். உணவு நிறு­வ­னங்கள், இந்த சுவைகள் கொண்ட உண­வுப்­பொ­ருட்­களை விற்க கற்­றி­ருப்­பது போல மீடியா நிறு­வ­னங்­களும் இத்­த­கைய செய்­தி­களை அளிக்­கின்­றன.ஆரோக்­கிய கண் கொண்டு பார்க்கும் போது, தக­வல்கள், அள­வுக்கு அதி­க­மாக இருப்­பதை ஆரோக்­கிய சிக்­க­லாக பார்க்க வேண்டும்.
தக­வல்­களில் தேர்வு இருக்­கி­றது என்­பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எதிர்­கொள்­வது தகவல் சுமை அல்ல; தகவல் மிகை நுகர்வு ஆகும். தகவல் சுமை என்­பது அதிக அள­வி­லான தக­வல்­களை புதிய செயல்­திறன் மிக்க வழி­களில் தெரிந்து கொள்­வ­தாகும். தகவல் மிகை நுகர்வு என்­பது, நமக்கு தேவை­யான தக­வல்­களை மட்டும் தெரிந்து கொள்­வதில் புதிய வழி­களை கண்­ட­றி­த­லாகும். செய்தி இணை­ய­த­ளங்கள், பல­வித தலைப்­பு­களை சோதித்து அதிகம் படிக்­கப்­படும் தலைப்­பு­களை முன்­வைக்­கின்­றன. இதனால் தகவல் பருமன் பிரச்னை உண்­டா­கிறது. அதா­வது அடிப்­படை தக­வல்­களை அறி­யாமல் செய்­தி­களை தெரிந்து கொள்­வது. இது தகவல் பற்­றாக்­கு­றையால் உண்­டா­வது அல்ல. தவ­றான வகை­ தக­வல்­களை தேர்வு செய்து நுகரும், புது வகை­யான தகவல் அறி­யா­மையால் உண்­டா­கி­றது.

தகவல் பருமன் என்­பது மூன்று அம்­சங்­களை கொண்­டி­ருக்­கி­றது. தேர்ந்­தெ­டுத்து முன்­வைக்­கப்­படும் தக­வல்­களை முன்­வைப்­பதால், ஒரு­வ­ரது நம்­பிக்கை வலு­வா­கிறது. இதன் மூலம் அறி­யாமை உரு­வாக்­கப்­ப­டு­கி­றது.அதே போல நமக்கு நெருக்­க­மான வட்­டத்தில் இருந்து வராத தக­வ­ல் களை நிரா­க­ரிக்கும் போக்கு இருக்­கி­றது. மூன்­றா­வ­தாக நாம் தேர்வு செய்யும் நண்­பர்­களும், தொடர்­பு­களும் நமக்கு ஒரே­வி­த­மாக தக­வல்­களை வடி­கட்டி அளிக்­கின்­றனர்.

இதி­லி­ருந்து விடு­பட தக­வல்­களை நாமாக தேடிச்­ செல்ல வேண்டும். நம்மை முற்­று­கை­யிடும் தக­வல்­களை அப்­ப­டியே நுகர்­வதை தவிர்க்க வேண்டும். எங்­கி­ருந்து தக­வல்­களை பெற வேண்டும்; அவற்றை எப்­படி புரிந்து கொள்ள வேண்டும் என்­பதை அறிந்­தி­ருக்க வேண்டும்.தக­வல்­களை தேடும் போது பொது­வான தேடி­யந்­தி­ரங்­களை மட்டும் பயன்­ப­டுத்­தாமல்; பொருத்­த­மான சிறப்பு தேடி­யந்­தி­ரங்­களை நாட வேண்டும். தக­வல்­களை எப்­படி வடி­கட்டி நுகர வேண்டும் என அறிந்­தி­ருப்­பது அவ­சியம். தக­வல்­களை உரு­வாக்கி, வெளி­யிடவும் அறிந்­தி­ருக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)