வருமான வரித்துறை பட்டியலில்33 சதவீத நிறுவனங்கள் மாயம்வருமான வரித்துறை பட்டியலில்33 சதவீத நிறுவனங்கள் மாயம் ... காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2017
01:58

சார், நான், ‘பிராண்டு’ பெய­ரில், அரிசி மற்­றும் ‘பிராண்டு’ அல்­லாத அரிசி வியா­பா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ளேன். ‘பிராண்டு’ உள்ள அரி­சிக்கு, 5 சத­வீத வரி, ‘பிராண்டு’ அல்­லாத அரி­சிக்கு, வரி ஏதும் விதிக்­கப்­ப­ட­வில்லை. நான், ஒரே விலைப் பட்­டி­ய­லில், இரண்டு வகை அரி­சி­யை­யும் விற்­பனை செய்ய இய­லுமா?– ஜோசப், நெல்லைநீங்­கள் கூறிய பரி­வர்த்­த­னை­யில், ஒரே விலைப் பட்­டி­ய­லில், வரி­யில்­லாத அரி­சி­யை­யும் சேர்த்து விற்­பனை செய்­ய­லாம்.
நாங்­கள், ‘ஜாப் ஒர்க்’ முறை­யில், ‘டெக்ஸ்­டைல்’ துணி­களை தைத்து, ஆயத்த ஆடை­யாக்கி, முதன்மை வழங்­கு­ன­ருக்கு வழங்கி வரு­கி­றோம். இதற்கு எத்­தனை சத­வீ­தம் வரி வரும்?– சுந்­த­ரம், சென்னைஇத்­த­கைய பணிக்கு சலுகை வரி­யாக, 5 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும்.
நாங்­கள், சர்க்­கரை ஆலை­யி­லி­ருந்து கரும்பு சக்கை வாங்கி, அதை காகி­தம் தயா­ரிக்க உப­யோ­கப்­ப­டுத்­து­கி­றோம். இத்­த­கைய கரும்பு சக்­கைக்கு, 12 சத­வீத வரி என, கூறு­கின்­ற­னர். இது, சரி­யான விகி­தமா?– பாவேந்­தன், திருச்சிகரும்பு சக்­கையை, ஆலை­யி­லி­ருந்து பெறும் போது, அதற்கு, 5 சத­வீ­தம் தான் (2.5 + 2.5) வரி விதிக்க வேண்­டும். 12 சத­வீ­தம் என்­பது தவ­றா­னது.
சார், நாங்­கள் உண­வ­கம் நடத்தி வரு­கி­றோம். அதில் அரவை இயந்­தி­ரம், மிக்சி மற்­றும் குளிர்­சா­தன பெட்டி போன்­றவை வாங்­கும் போது செலுத்­தும், ஜி.எஸ்.டி.,யை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற முடி­யுமா? அதை செலுத்த வேண்­டிய வரி தொகை­யி­லி­ருந்து கழித்­துக் கொள்ள முடி­யுமா?– கும­ரேஷ், ஈரோடுநீங்­கள், வியா­பார நிமித்­த­மாக செலுத்­திய அனைத்து, ஜி.எஸ்.டி.,யையும், உள்­ளீட்டு வரி பய­னாக பெற முடி­யும். நீங்­கள் கூறிய, அனைத்து தொழில் உப­க­ர­ணங்­க­ளுக்­கும் உள்­ளீட்டு வரி பயன் உண்டு.
நாங்­கள், புதுச்­சே­ரி­யில் வீட்டு உட்­புற வேலைப்­பாடு நிறு­வ­னத்தை நடத்தி வரு­கி­றோம். ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்­று­விட்­டோம். நாங்­கள், சென்­னை­யி­லி­ருந்து பொருட்­களை வாங்­கி­னால், ஐ.ஜி.எஸ்.டி., வரு­கிறது. அதை, புதுச்­சே­ரி­யில் செலுத்த வேண்­டிய வரி­யில் கழித்து கொள்­ள­லாமா?– ராஜேஷ், புதுவைஇதை, ஏற்­க­னவே விளக்கி உள்­ளோம். நீங்­கள், சென்­னை­யி­ல்­இருந்து செய்த கொள்­மு­த­லில் செலுத்­திய, ஐ.ஜி.எஸ்.டி.,யை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற்று கொள்­ள­லாம். இதில், எந்த தடை­யும் இல்லை.
வேறு மாநி­லத்­தில் உள்ள, எங்­க­ளது கிளை நிறு­வ­னத்­திற்கு, இதற்கு முன் எந்த பதி­வும் பெற­வில்லை. இப்­போது, தமி­ழ­கத்­தில் உள்ள எங்­க­ளது பதிவு எண்­ணில், அந்த கிளை நிறு­வ­னத்தை, கூடு­தல் தொழில் இட­மாக சேர்க்க முடி­யுமா?– அறி­வ­ழ­கன், விழுப்­பு­ரம்உங்­க­ளது கிளை, ஒரே மாநி­லத்­தில் இருந்­தால், தாரா­ள­மாக சேர்த்­துக் கொள்­ள­லாம். ஆனால், நீங்­கள் கூறிய, உங்­கள் கிளை வேறு மாநி­லத்­தில் உள்ள கார­ணத்­தால், அத்­த­கைய கிளையை, அந்த மாநி­லத்­தில் தான், புதிய பதி­விற்­காக விண்­ணப்­பிக்க வேண்­டும்.
நாங்­கள், எங்­களின் முக­வர்­கள் மூல­மாக, தமி­ழ­கத்­தின் பல்­வேறு இடங்­களில் விற்­பனை செய்து வரு­கி­றோம். எங்­க­ளு­டைய முக­வர்­கள், வேறு சில விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு முக­வர்­க­ளாக உள்­ள­னர். இந்­நி­லை­யில், ஜி.எஸ்.டி., சட்ட விதி­க­ளின்­படி, முக­வர்­களின் விற்­பனை தொகை­யும், எங்­க­ளு­டைய விற்­பனை தொகை­யாக கரு­தப்­ப­டுமா?– மன்­சூர், காரைக்­கால்முக­வர்­களின் விற்­பனை தொகை, முதன்மை சப்­ளை­ய­ரின் விற்­ப­னை­யாக கரு­தப்­ப­டாது. எனவே, அது குறித்து கவலை வேண்­டாம்.
நாங்­கள், ‘தீம் பார்க்’ ஒன்றை, கோவை அருகே நடத்தி வரு­கி­றோம். இதற்கு நுழைவு கட்­ட­ணம் வசூல் செய்­யும் போது, ஜி.எஸ்.டி., எத்­தனை சத­வீ­தம் வசூ­லிக்க வேண்­டும்?– அமீத், கோவைகண்­காட்சி, பொழுது போக்கு பூங்கா போன்­ற­வற்­றிற்கு நுழைவு கட்­ட­ணம் வசூ­லித்­தால், அதில், 28 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., வசூல் செய்து செலுத்த வேண்­டும்.
சார், முத­லில் நான், என் பெய­ரில் சேவை வரி பதிவு செய்­தி­ருந்­தேன். ‘மைக்­ரே­ஷன்’ முறை­யில், தற்­கா­லிக பதிவு எண் பெற்று விட்­டேன். இப்­போது, ஜி.எஸ்.டி., பதிவை என் நிறு­வ­னத்­தின் பெய­ரில் மாற்ற முடி­யுமா?– ரங்­க­நா­தன், விரு­து­ந­கர்ஒரே, ‘பான்’ எண் உள்ள உங்­கள் நிறு­வ­னத்­தின் பெய­ரில், மாற்­றம் செய்து கொள்­ள­லாம். நீங்­கள், ஆர்.இ.ஜி., 26 எனும் படி­வத்­தில், உங்­களின் தற்­கா­லிக பதிவை நிரந்­தர பதி­வாக மாற்­றும் போது, பெயர் மாற்­றம் செய்து கொள்­ள­லாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)