பதிவு செய்த நாள்
19 ஆக2017
07:30

புதுடில்லி : ‘தொலை தொடர்பு துறையில், 2018ல், 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என, அசோசெம் – கே.பி.எம்.ஜி., ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: நாட்டில், ‘4ஜி’ தொழில்நுட்ப, ‘ஸ்மார்ட் போன்’கள் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு, பெருகி வரும் மின்னணு பணப் பரிவர்த்தனைகள், தகவல், படங்கள் ஆகியவற்றின் பரிமாற்றம் போன்றவை துணை புரிந்துள்ளன. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப, தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதே சமயம், புதிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க தேவையான தொழில்நுட்பங்களை புகுத்தி, அவற்றுக்கான, வல்லுனர்களை நியமிக்க வேண்டும்.
தற்போது, ஸ்மார்ட் போன்கள் வாயிலாக பணம் செலுத்தும், ‘டிஜிட்டல் வாலட்’ பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால், இத்தகைய செயல்பாடுகளுக்கு, சைபர் பாதுகாப்பு வசதிகளுக்கு, நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். இதன் காரணமாக, தொலை தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகளில், 2018ல், 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், தொலை தொடர்பு துறையில், அடுத்த தலைமுறைக்கான, ‘5ஜி – ஐ.ஓ.டி., – எம் 2 எம்’ போன்ற, புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு காரணமாக, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம், 2021ல், 8.70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், அப்ளிகேஷன் டெவலப்பர், விற்பனை பிரதிநிதி, ஸ்மார்ட் போன் பழுது நீக்கும் வல்லுனர், வலைதள மோசடி தடுப்பு வல்லுனர் உள்ளிட்டோரை, அதிகளவில் பணிக்கு அமர்த்தும். அத்துடன், தற்போதைய ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கும்– ‘அசோசெம்’ ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|