ஜி.எஸ்.டி., சில விளக்­கங்­கள்; தெளி­வு­கள்ஜி.எஸ்.டி., சில விளக்­கங்­கள்; தெளி­வு­கள் ... ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி சேமிப்பு கணக்கை நிர்­வ­கிப்­பது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2017
07:26

வட்டி விகிதம் குறையும் சூழலில், சேமிப்பு வங்கி கணக்கை திறம்­பட நிர்­வ­கிப்­பது மற்றும் அதிக பலன் தரக்­கூ­டிய நிதி சாத­னங்­களை பரி­சீ­லிப்­பது ஆகி­யவை அவ­சி­ய­மா­கி­றது.

கட­னுக்­கான வட்டி விகிதம் மட்டும் அல்­லாமல், வைப்பு நிதி மற்றும் சிறு சேமிப்பு திட்­டங்­களுக்­கான வட்­டி ­வி­கிதம் குறைந்து வரும் சூழலில் தற்­போது, வங்­கிகள் சேமிப்பு கணக்­கிற்­கான வட்டி விகி­தத்­தையும் குறைக்கத் துவங்­கி­யுள்­ளன. பொது­வா­கவே வங்கி சேமிப்பு கணக்கில் வைக்­கப்­படும் பணத்­திற்கு குறை­வான வட்டி விகி­தமே வழங்­கப்­ப­டு­கி­றது. பொது­வாக இது, 4 சத­வீ­த­மாக அமை­கி­றது. ஒரு சில வங்­கிகள் கூடுதல் வட்டி விகிதம் அளிக்­கின்­றன. புதிய வகை வங்­கி ­க­ளான, பேமெட்ன் வங்­கி­களில் சில அதிக வட்டி அளிக்­கின்­றன.
பண­வீக்கம் காரணம்:
இந்த பின்­ன­ணியில் அண்­மை­கா­ல­மாக வங்­கிகள் சேமிப்பு கணக்­கிற்­கான வட்டி விகி­தத்தை மேலும் குறைக்கத் துவங்­கி­யுள்­ளன. நாட்டின் மிகப்­பெ­ரிய வங்­கி­யான ஸ்டேட் வங்கி தான் முதலில் இதை துவக்கி வைத்­தது. அதன் பின், மற்ற வங்­கி­களும் தொடர்ச்­சி­யாக வட்டி விகி­தத்தை குறைத்து வரு­கின்­றன. இது­வரை, 11க்கும் மேற்­பட்ட வங்­கிகள் சேமிப்பு கணக்­கிற்­கான வட்டி விகி­தத்தை குறைத்­துள்­ளன. இந்த போக்கு தொடரும் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வங்­கிகள் சேமிப்பு கணக்­கிற்­கான வட்­டி­வி­கி­தத்தை குறைக்க பல கார­ணங்கள் இருக்­கின்­றன. பண­வீக்கம் இவற்றில் பிர­தா­ன­மாக இருக்­கி­றது. தற்­போ­தைய சூழலில், பண­வீக்கம் குறைந்து வரு­வதால், உண்­மை­யான வட்டி விகிதம் என்­பது அதி­க­மாக இருப்­ப­தாக வங்­கி­யா­ளர்கள் கரு­து­கின்­றனர். ஜூன் மாதத்தில் சில்லரை பண­வீக்க விகிதம், 1.54 சத­வீதம் குறைந்து ஓராண்டு அரசு பத்­தி­ரங்கள் மீதான பண­வீக்கம் சார்ந்த பலன், 4.82 சத­வீ­த­மாக இருந்­தது. வழக்­க­மான வட்டி விகி­தத்­துடன் பண­வீக்­கத்தை கணக்கில் எடுத்­துக்­கொண்ட பின், உண்­மை­யான வட்டி விகிதம் கணக்­கி­டப்­ப­டு­கி­றது. வழக்­க­மான வட்டி விகி­தத்தில் இருந்து பண­வீக்­கத்தை கழிப்­பதன் மூலம் உண்­மை­யான வட்டி விகிதம் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. எனவே, வங்­கிகள் வட்டி விகி­தத்தை குறைக்கத் துவங்­கி­யுள்­ளன. இந்த கணக்கு வங்­கி­க­ளுக்கு மட்டும் அல்ல வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்கு, ‘டிபாசிட்’ செய்­துள்­ள­வர்­க­ளுக்கும் பொருந்தும். பண­வீக்­கத்தை கணக்கில் எடுத்­துக்­கொண்டால் வட்­டியின் பலன் இன்னும் குறை­வாக இருக்கும்.
பணத்தின் மதிப்பு:
வங்­கிகள் சேமிப்பு கணக்கு மீது, தின­சரி அடிப்­ப­டையில் வட்­டியை கணக்­கிட்டு காலாண்டு அடிப்­படையில் வழங்­கு­கின்­றன. இந்த நிலையில் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்­திற்­கான பலன் மீதான மதிப்பின் மீது முத­லீட்­டா­ளர்கள் கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­வ­தாக நிதி வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். பொது­வா­கவே, உட­ன­டி­யாக தேவைப்­ப­டாமல் இருக்கும் பணத்தை சேமிப்பு கணக்கில் வைத்­தி­ருப்­பது சரி­யா­னது அல்ல என, நிதி வல்­லு­னர்கள் கூறி வருகின்­றனர். ஆனால், வட்டி விகிதம் குறையத் துவங்­கி­யுள்ள நிலையில், இது நிச்­சயம் ஏற்­ற­தல்ல என்­கின்­றனர்.
சேமிப்பு கணக்கில் குறை­வா­கவே பலன் கிடைப்­பதால், பண வீக்கம் மற்றும் வரி தாக்­கத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் நீண்ட கால நோக்கில் அதிக பலனை பெற வாய்ப்­பில்லை என கரு­தப்­ப­டு­கி­றது. எனவே, சும்மா இருக்கும் பணத்தை, மேலும் சிறந்த வழியில் முத­லீடு செய்­வதே சரி­யாக இருக்கும் என, வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். தற்­போது இதற்­கான அவ­சியம் மேலும் வலுப்­பெற்­று உள்­ளது.
நிதி சாத­னங்கள்:
சேமிப்பு கணக்­கிற்கு தேவை­யான குறைந்த பட்ச தொகை மற்றும் அவ­சர செல­வுக்­காக தேவைப்­ப­டக்­கூ­டிய தொகை போக, எஞ்­சி­யுள்ள கூடுதல் தொகையை பொருத்­த­மான நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்ய வேண்டும். சேமிப்பு கணக்கில் இருந்து வைப்பு நிதிக்கு மாற்­றக்­கூ­டிய வச­தியை பயன்­ப­டுத்­தலாம். ஆனால், தற்­போது வைப்பு நிதிக்­கான வட்­டியும் குறை­வாக உள்ள சூழலில், ‘லிக்விட் பண்ட்’ வகை மியூச்­சுவல் பண்ட்­களில் முத­லீடு செய்­வதை பரி­சீ­லிக்­கலாம் என்­கின்­றனர். உட­ன­டி­யாக பணம் எடுக்கும் வாய்ப்பு கொண்ட லிக்விட் பண்ட்கள், 6 சத­வீத அள­வி­லான பலனை அளித்து வரு­கின்­றன. பொது­வா­கவே சேமிப்பு கணக்கில் அதிக தொகையை சிறு முத­லீட்­டா­ளர்கள் முடக்கி வைப்­பதை நிதி வல்­லு­னர்கள் ஆத­ரிப்­ப­தில்லை. ஆனால், இந்­தி­யர்கள் மத்­தியில் இந்த வழக்­கமே பர­வ­லாக உள்­ளது. இந்த நிலையில் இருந்து மாறி, மியூச்­சுவல் பண்ட் உள்­ளிட்ட நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­வது பற்றி பரி­சீ­லிக்க இது பொருத்­த­மான கால­மாக அமை­கி­றது.

மாற்று வழிகள்* பொது­வா­கவே, சேமிப்பு கணக்கில் அதிக தொகையை முடக்கி வைப்­பது பொருத்­த­மா­னது அல்ல.* சும்மா இருக்கும் பணத்தை (ஐடில் கேஷ்) சரி­யான நிதி சாத­னங்­களுக்கு மாற்ற வேண்டும்.* மியூச்­சுவல் பண்ட் வாய்ப்­பு­களை பரி­சீ­லிக்க வேண்டும்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)