பதிவு செய்த நாள்
09 செப்2017
01:35

புதுடில்லி:வெளிநாட்டு வர்த்தக பிரச்னைகளுக்கு, வலைதளத்தில் தீர்வு காணும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள, மத்திய வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுஉள்ள அறிக்கை:வெளிநாடுகளில் வர்த்தகம் புரியும், இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, இயக்குனரகத்தின் வலைதளத்தில், தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, ஏற்றுமதி அல்லதுஇறக்குமதியில், வர்த்தகர்கள்சந்திக்க நேரும் பிரச்னைகளுக்கு, contact@DGFT என்ற பிரிவின் கீழ், உரிய நிவாரணம் பெறலாம்.வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் பரஸ்பர வர்த்தகத்தில், ஏதேனும் இடர்ப்பாடுகளை சந்திக்க நேர்ந்தால், ‘டுவிட்டர், இ – மெயில்’ போன்றவற்றில் தெரிவிப்பதை, வர்த்தகர்கள் தவிர்க்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் இயக்குனரகங்கள் அல்லது முகமை அமைப்புகள் தொடர்பான அனைத்து பிரச்னைகள் குறித்தும், மேலே குறிப்பிட்டுஉள்ள வலைதள பிரிவில் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|