பதிவு செய்த நாள்
09 செப்2017
01:38

புதுடில்லி:‘‘வாகன துறையின் வளர்ச்சிக்கு, அரசின் கொள்கைகள் நிலையாக இருக்க வேண்டும்,’’ என, டி.வி.எஸ்., கம்பெனி தலைவர் வேணு சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
டில்லியில், இந்திய வாகன தயாரிப்புநிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில், அவர் மேலும் பேசியதாவது:வாகன துறை வளர்ச்சிக்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. இத்துறை, திறமையான தொழிலாளர்கள், ஆராய்ச்சி, அடிப்படை கட்டமைப்பு ஆகியவை தொடர்பான ஆலோசனைகளை, அரசுக்கு தொடர்ந்து வழங்கி வர வேண்டும்.
மிக முக்கியமாக, வாகன துறையின் வளர்ச்சிக்கு, நிலையான கொள்கையை, அரசு கடைப்பிடிக்க வேண்டும்.துரதிர்ஷ்டவசமாக, நீதிமன்றங்கள் தலையீடு, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு தொடர்பான, ‘பி.எஸ்., – 4’ விதிகளின் அறிமுகத்தில் செய்த மாற்றம் போன்றவை, வாகன துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தின.
நாம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். இந்திய தொழில்நுட்ப மைய பட்டதாரிகளின் ஆற்றலை, முழுமையாக பயன்படுத்த வேண்டும்.சீனாவை போல, இந்தியாவில் பல்கலைக் கழகங்களும், மின்கல ஆய்வுக் கூடங்களும் இல்லை. சீனாவில், ஒரு பல்கலையில், 25 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இதில், சரிபாதி அளவு கூட, இந்தியாவின் அனைத்து தொழில்நுட்ப மையங்களில், மாணவர்கள் இல்லை. தொழிலாளர்களின் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசு, தேவைகளை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வாகன துறை, நேரடியாகவும், மறைமுகமாகவும், 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது; இது, 2022ல், 3.80 கோடியாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., வெளிப்படையான வரி செலுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தி, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|