95 போன் தொழிற்சாலைகள் 3 ஆண்டுகளில் துவக்கம்95 போன் தொழிற்சாலைகள் 3 ஆண்டுகளில் துவக்கம் ... ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி : ரூ.65-ஐ எட்டியது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி : ரூ.65-ஐ எட்டியது ...
சர்வதேச எரிசக்தி நிறுவனங்களில் ரிலையன்ஸ் 3வது இடம் பிடித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2017
00:20

புதுடில்லி : எரி­சக்தி துறை­யில், சொத்து மதிப்பு, விற்­று­மு­தல், லாபம், முத­லீடு சார்ந்த வரு­வாய் ஆகிய, நான்கு அம்­சங்­கள் அடிப்­ப­டை­யில், உல­க­ள­வில், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னம், மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னேறி உள்­ளது.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘எஸ் அண்டு பி குளோ­பல் பிளாட்ஸ்’ நிறு­வ­னம், எரி­சக்தி துறை­யில், இந்­தாண்­டின் மிகச் சிறந்த, 250 நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை வெளி­யிட்டு உள்­ளது. அதில், ரஷ்­யா­வின், காஸ்ப்­ர­ம் நிறு­வ­னம், அமெ­ரிக்­கா­வின், எக்ஸ்­கான் மொபைல் நிறு­வ­னத்தை விஞ்சி, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. எக்ஸ்­கான் மொபைல் நிறு­வ­னம், 12 ஆண்­டு­க­ளாக, முத­லி­டத்­தில் இருந்­தது.

கடந்த ஆண்டு, 114வது இடத்­தில் இருந்த, ஜெர்­ம­னி­யின், இ.ஆன் நிறு­வ­னம், இந்­தாண்டு, 112 நிறு­வ­னங்­களை கடந்து, 2வது இடத்­திற்கு முன்­னேறி உள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் சொத்து மதிப்பு, வரு­வாய் உள்­ளிட்­டவை, சிறப்­பான வளர்ச்சி கண்­டுள்­ள­தால், இது சாத்­தி­ய­மாகி உள்­ளது. ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், ஐந்து நிறு­வ­னங்­களை பின்­னுக்கு தள்ளி, மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னேறி உள்­ளது. கடந்த ஆண்டு, இந்­நி­று­வ­னம், 7வது இடத்­தில் இருந்­தது.

பட்­டி­ய­லில் இடம் பெற்­றுள்ள, அனைத்து நிறு­வ­னங்­களின் சொத்து மதிப்பு, 550 கோடி டால­ருக்­கும் அதி­க­மாக உள்­ளது. இந்த பட்­டி­ய­லில், கோல் இந்­தியா நிறு­வ­னம், 45வது இடத்­திற்கு தள்­ளப்­பட்டு உள்­ளது. கடந்த ஆண்டு, இந்­நி­று­வ­னம், 38வது இடத்­தில் இருந்­தது. ஆசிய அள­வில், நிலக்­கரி உற்­பத்தி சரி­வ­டைந்து உள்­ளது. சீனா­வின் நிலக்­கரி உற்­பத்தி, 7.9 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. இந்த பட்­டி­ய­லில், முதல், 10 இடங்­களில் உள்ள, எரி­சக்தி நிறு­வ­னங்­களின் வரு­வாய், 30 சத­வீ­தம் உயர்ந்து, 1.10 லட்­சம் கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, 83,020 கோடி டால­ராக இருந்­தது.

அதே சம­யம், இதே காலத்­தில், இந்­நி­று­வ­னங்­களின் லாபம், 14 சத­வீ­தம் குறைந்து, 7,430 கோடி டால­ரில் இருந்து, 6,370 கோடி டால­ராக குறைந்­துள்­ளது.இந்­திய நிறு­வ­னங்­களில், பாரத் பெட்­ரோ­லி­யம் கார்ப்­ப­ரே­ஷன், 39வது இடத்தை பிடித்­துள்­ளது. இந்­துஸ்­தான் பெட்­ரோ­லி­யம், 48வது இடத்­தி­லும், பவர் கிரிட் கார்ப்­ப­ரே­ஷன், 81வது இடத்­தி­லும் உள்ளன. கெயில் இந்­தியா நிறு­வ­னம், 106வது இடத்­தில் உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

‘டாப் – 5’ நிறுவனங்கள்
ரஷ்யா - காஸ்­ப்ர­ம்ஜெர்­மனி - இ.ஆன்இந்­தியா - ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ்தென் கொரியா - கொரியா எலக்ட்­ரிக் பவர்சீனா - சீனா பெட்­ரோ­லி­யம் அண்டு கெமிக்­கல்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)