பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் விபரங்கள் அளிக்கும் நடைமுறை ஒத்தி வைப்புபங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் ... ... அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2017
01:04

இந்­திய பங்­குச் சந்­தை­கள், கடந்த வாரம், சரி­வில் முடி­வ­டைந்­தன. தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, 4 சத­வீ­தம் குறைந்து, வியா­பா­ர­மா­கி­யது. இந்த ஆண்­டின் தொடர் மாத உயர்­வுக்­குப் பின், செப்­டம்­பர் கடைசி இரு வாரங்­களும், சந்தை, சரி­வில் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
தொடர்ச்­சி­யாக வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் விற்­பனை செய்­வ­தும், உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், சந்­தை­யில் கொள்­மு­தல் செய்­வ­து­மான போக்­கும் நில­வு­கிறது. உயர் பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்­குப் பிறகு, நம் உள்­நாட்டு முத­லீட்டு திறன் உயர்ந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. இதுவே, சந்­தை­யில் ஒரு பிர­தான சப்­போர்ட்­டாக உள்­ளது.
இன்று சந்­தைக்கு விடு­முறை நாளா­கும். மேலும், ஆசிய பங்­குச் சந்­தை­களும் இந்த வாரத்­தில் சில நாட்­கள், விடு­முறை கார­ண­மாக இயங்­காது.இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, சந்­தை­யின் போக்கு, செவ்­வாய் மற்­றும் புதன் கிழ­மை­களில் நடை­பெற உள்ள, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்­டம் மற்­றும் புதன் அன்று வெளி­வர உள்ள வட்டி விகி­தம் குறித்த அறி­விப்பு ஆகி­ய­வற்­றின் தாக்­கத்தை பொறுத்து இருக்­கும்.
தொடர் பண­வீக்க உயர்வு, அக்­டோ­பர் மற்­றும் நவம்­பர் மாத­மும் பண­வீக்­கம் உய­ரும் என்ற எதிர்­பார்ப்பு மற்­றும் தற்­போது நிலவி வரும் பொரு­ளா­தார மந்த நிலை, உயர்ந்து வரும் நிதி பற்­றாக்­குறை, ரிசர்வ் வங்கி வட்டி விகி­தத்தை குறைக்­கக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு என, பல கார­ணி­கள் சந்­தை­யில் நில­வு­கின்றன. வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­டாது என்ற கருத்­தும் ஒரு தரப்­பில் நில­வு­கிறது.
பருவ மழை தற்­போது சரா­ச­ரியை விட, 6 சத­வீ­தத்­துக்­கும் குறை­வா­கும். ரிசர்வ் வங்­கி­யின்,ரெப்போ ரேட், 7 ஆண்டு குறை­வா­கும். இருப்­பி­னும், வங்கி கடன் வட்டி விகி­தம், 10 சத­வீ­தத்­துக்­கும் மேலாக உள்­ளது.
கடந்த நிதி கூட்­டத்­தில், ரிசர்வ் வங்கி, இந்­திய பொரு­ளா­தார வளர்ச்சி, 7.3 சத­வீ­தம் இருக்­கும் என அறி­வித்­தது. ஆனால், தற்­போது உல­கின் மிகப் பெரிய நிதி நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி குறைந்து, 6.75 முதல், 6.5 சத­வீ­தம் என்ற அள­வில் இருக்­கும் என தெரி­வித்­துள்­ளது. எனவே, வெளி­வர இருக்­கும் வளர்ச்சி விகித அறி­விப்­பும் சந்­தை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும்.
செப்­டம்­பர் மாத, வாகன விற்­பனை விப­ரம் இந்த வாரம் வெளி­வர உள்­ளது. இதில் கார் விற்­பனை அதி­க­ரித்­தும், இரு­சக்­கர வாக­னங்­கள் விற்­பனை உயர்ந்­தும் காணப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.கன­ரக வாகன விற்­பனை, ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களை விட குறை­வாக இருக்­கும். இதில், அசோக் லேலாண்டு மட்­டும் அதி­க­ரிக்­கக்­கூ­டும். மேலும் நாளை, பி.எம்.ஐ., காரணி வெளி­வர உள்­ளது. அது, 51.9 ஆக இருக்­கும் என்ற எதிர்­பார்ப்பு உள்­ளது.வரும் நாட்­களில், நிப்­டி­யின் ரெசிஸ்­டன்ஸ், 9,960 மற்­றும், 10,035 ஆகும். சந்­தை­யின் பிர­தான சப்­போர்ட், ஆகஸ்ட் 11 குறைவு ஆன, 9,685 ஆகும்.
கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்
டிவிஸ் லேப், ஸ்பார்க், விகார்டு, எபிக் இண்­டஸ்ட்­ரீஸ், ஹிமாத்ரி ஸ்பெ­ஷா­லிட்டி(எச்.எஸ்.சி.எல்.)
-முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)