பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் விபரங்கள் அளிக்கும் நடைமுறை ஒத்தி வைப்புபங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் ... ... அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2017
01:05

கச்சா எண்ணெய்
சர்­வ­தேச சந்­தை­யில், பல வாரங்­க­ளுக்­குப் பின், முதல் முறை­யாக, ஒரு பேரல், 50 டால­ரைக் கடந்து, வியா­பா­ர­மா­கி­யது. உல­க­ள­வில் நிலவி வரும் அசா­தா­ர­ண­மான சூழல் மற்­றும் ஒபெக் உறுப்பு நாடு­கள், தங்­க­ளது உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை சரி­வர அமல்­ப­டுத்­தும் என்ற தீர்­மா­னம், அதன் காலக்­கெ­டுவை நீட்­டிப்­பது பற்­றிய ஆலோ­சனை, இதுவே, சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை அதி­க­ரிப்­பிற்கு கார­ண­மா­கி­யது.
கடந்த மூன்று வாரங்­க­ளாக, எண்­ணெய் விலை­யா­னது, ஒரு பேரல், 47 டால­ரில் இருந்து அதி­க­ரித்து, 52.85 டாலர் என்ற உச்­சத்தை தொட்­டது. தற்­போது, ஒரு பேரல், 51.85 என்ற நிலை­யில் உள்­ளது.செப்­டம்­பர் மாதம் உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கை­யா­னது, 86 சத­வீ­தம் அள­வுக்கு இலக்கை அடைந்­த­தா­க­வும், இது முந்­தைய மாத­மான, ஆகஸ்­டில், 89 சத­வீ­த­மாக இருந்­தது என­வும், ஒபெக் புள்­ளி­வி­ப­ரம் தெரி­விக்­கிறது.இதன் அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, அனைத்து உறுப்பு நாடு­களும் உற்­பத்தி குறைப்­பில் ஆர்­வம் காட்டி வரு­வது தென்­ப­டு­கிறது.
சமீ­ப­கா­ல­மாக நிலவி வரும் அசா­தா­ர­ண­மான சூழல், எண்­ணெய் விலை உயர்­வுக்கு சாத­க­மாக அமைந்­தது. வட கொரியா – அமெ­ரிக்கா நாடு­க­ளுக்கு இடை­யே­யான மோதல் போக்கு, ஈராக் –குர்­திஸ்­தான் அமைப்பு மோதல், ஏமன் நாட்­டில் ஏற்­பட்­டி­ருக்­கும் உள்­நாட்­டுப் பூசல் போன்­றவை, அசா­தா­ர­ண­மான சூழல் அமைய கார­ண­மா­கி­யது.
அமெ­ரிக்­கா­வில் ஏற்­பட்ட சூறா­வளி புய­லால், ஆழ்­கு­ழாய் எண்­ணெய் உற்­பத்தி மற்­றும் சுத்­தி­க­ரிப்பு ஆலை­கள் பாதிப்­புக்கு உள்­ளா­கின.இத­னால், அந்­நாட்டு எண்­ணெய் உற்­பத்­தி­யில்தொய்வு நிலை காணப்­ப­டு­கிறது. வரும் நாட்­களில் விலை உயர்ந்து காணப்­பட வாய்ப்­புள்­ளது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,330 3,240 3,430 3,550என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 50.50 49.10 51.85 53.00

தங்கம், வெள்ளி
கடந்த வாரம் தங்­கத்­தின் விலை சரி­வைச் சந்­தித்­தது. தங்­கம், ஒரு அவுன்ஸ், 1,280 டால­ரா­க­வும், வெள்ளி, ஒரு அவுன்ஸ், 16.58 டால­ரா­க­வும் இருந்­தது. சத­வீ­தம் அள­வில், தங்­கம், 6 சத­வீ­த­மும், வெள்ளி, 9 சத­வீ­த­மும் குறைந்­துள்­ளது.
அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இன்டெக்ஸ், ஒன்­பது மாத சரி­வில் இருந்து, செப்­டம்­பர் மாதம், சிறிய உயர்­வைக் கண­டது. கடந்த ஆண்டு, டிசம்­பர் மாதம், இன்டெக்ஸ் குறி­யீடு, 102.65 ஆக இருந்­தது. பின், இறக்­கம் கண்டு, செப்­டம்­பர் முதல் வாரம், 91.13 ஆக, 11 சத­வீ­தம் குறைந்­தது. செப்­டம்­பர், 2ம் தேதி முதல், குறி­யீடு உய­ரத் துவங்­கி­யது. இதே கால அள­வில், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள் குறை­யத் துவங்­கின.
டாலர் இன்­டெக்­சும், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­களும் எதிர்­ம­றை­யான போக்கு கொண்­ட­வை­யா­கும். ஒன்று உய­ரும் ­போது, மற்­றொன்று குறை­யும்.உதா­ர­ண­மாக, கடந்த ஆண்டு, டிசம்­பர் மாதம், தங்­கம் விலை, ஒரு அவுன்ஸ், 1,125 டால­ரில் இருந்து, செப்­டம்­பர் மாதம், 1,357 டால­ராக உயர்ந்­தது. இதே கால அள­வில், டாலர் இன்­டெக்ஸ், 11 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்­தி­ருந்­தது.
அமெ­ரிக்க பண­வீக்க விகி­தம் குறைந்து வரும் சூழல் உள்­ளது. மேலும், வாடிக்­கை­யா­ளர் செல­வி­னம் உயர்ந்து வரு­கிறது. இதன் கார­ண­மாக, வரும் டிசம்­பர் மாதம் நடை­பெற உள்ள, வட்டி விகித கூட்­டத்­தில், வட்டி விகி­தம், 0.25 சத­வீ­தம் உயர்த்­தப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இது­வும் தங்­கம், வெள்ளி விலை குறைய கார­ண­மா­கி­யது.வரும் நாட்­களில், வெள்­ளி­யன்று வெளி­வர உள்ள, அமெ­ரிக்க என்.எப்.பி., காரணி, சந்­தை­யின் போக்கை நிச்­ச­யிக்­கும்.

தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,500 29,330 29,680 30,050காம்எக்ஸ் (டாலர்) 1,280 1,272 1,291 1,300

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 39,300 38,610 39,890 40,500காம்எக்ஸ் (டாலர்) 16.60 16.22 16.90 17.25

செம்பு
கடந்த நான்கு மாதத்­தில், அதா­வது, ஜூன் முதல் செப்­டம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில், செம்­பின் விலை­யில் ஏறு­மு­கம் காணப்­ப­டு­கிறது. சுரங்க உற்­பத்­தி­யில் ஏற்­பட்ட பாதிப்பு மற்­றும் தேவை அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பும் இதற்கு முக்­கிய கார­ணங்­கள் ஆகும். இருப்­பி­னும், வெள்­ளி­யன்று வெளி­வந்த, சீனா­வின் தொழில் துறை பொரு­ளா­தார கார­ணி­யான, பி.எம்.ஐ., கடந்த ஆகஸ்ட் மாதம், 51.6 ஆக இருந்­தது. இது, செப்­டம்­பர் மாதம், 51.0 ஆக குறைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக, வரும் நாட்­களில், செம்­பின் விலை­யில், சிறிய அள­வில் இறக்­கம் காணப்­பட வாய்ப்­பி­ருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கிறது. மேலும், அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உயர்­வும், செம்­பின் விலையை பாதிக்­கும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 426.30 421.50 431.10 437.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)