பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் விபரங்கள் அளிக்கும் நடைமுறை ஒத்தி வைப்புபங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் ... ... அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பொரு­ளா­தார தேர் இழுப்­போம் வாருங்­கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2017
01:09

முன்­னாள் நிதி அமைச்­சர் யஷ்­வந்த் சின்ஹா, சுப்­பி­ர­ம­ணி­யன் சாமி, ஆடிட்­டர் குரு­மூர்த்தி என பல­ரும், இந்­திய பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் பற்றி தொடர்ந்து எழு­தி­யும், பேசி­யும் வரு­கின்­ற­னர். ஜூன் மாதத்­தோடு முடிந்த, முதல் காலாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி,5.7 சத­வீ­தத்­துக்கு சரிந்­ததே கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ளது.

தனி­ந­பர்­க­ளைக் குறை சொல்­வதோ, எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் உள்ள குறை­களை முன்­னி­லைப்­ப­டுத்­து­வதோ எந்­தப் பல­னை­யும் தரப் போவ­தில்லை. மாறாக, ஆக்­கப்­பூர்வ அணு­கு­முறை என்ன; வழி­முறை என்ன? என்று யோசிப்­பதே தேச நல­னுக்கு உகந்­தது.பண­ம­திப்பு நீக்­க­மும் சரக்கு மற்­றும் சேவை வரி அமல்­ப­டுத்­தப்­பட்­ட­தும், ஜி.டி.பி., சரி­வுக்கு முக்­கி­ய­மான கார­ணங்­க­ளா­கச் சொல்­லப்­ப­டு­கின்றன. அதற்கு முன்­பி­ருந்தே நம் கவ­னத்தை அதி­கம் கவ­ராத வேறொரு பிரச்னை இருக்­கிறது.

இந்­திய விவ­சாய வளர்ச்சி, 2004 – 12 கால­கட்­டத்­தில் வேக­மாக இருந்­தது. ஒவ்­வொரு ஆண்­டும் விவ­சாய உற்­பத்தி, 3 சத­வீ­தம் உயர, விவ­சாய வரு­வாய், 7.5 சத­வீ­த­மாக பெரு­கி­யது. இத­னால் ஏற்­பட்ட செல்­வப் பெருக்­கத்­தால், பொரு­ளா­தார வளர்ச்சி நக­ரங்­க­ளுக்­கும் பெருகி, முன்­னேற்­றம் ஏற்­பட்­டது.இந்த நிலைமை, 2013 –14ல் மாற்­ற­ம­டைந்­தது. இந்­திய ரிசர்வ் வங்கி, நிதிப் பற்­றாக்­கு­றையை கட்­டுப்­பாட்­டுக்கு கொண்டு வர முயன்­ற­ போது, உலக அள­வில் விவ­சாய பொருட்­க­ளுக்­கான விலை­கள் சரிந்து வந்­தன.

ஒவ்­வொரு ஆண்­டும், 8 சத­வீத அள­வுக்கு உயர்த்தி வழங்­கப்­பட்ட குறிப்­பிட்ட சில விவ­சாய பொருட்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச ஆதார விலை, 3.5 சத­வீ­த­மாக சரிந்­தது. இத­னால், ஊர­கப் பகு­தி­களில் ஏற்­பட்டு வந்த இயல்­பான வளர்ச்சி, தளர்ச்­சி­ய­டை­யத் துவங்­கி­யது.இத­னோடு, 2014 – 15, 2015 – 16 இரண்டு ஆண்­டு­களில் நாட்­டில் கடும் வறட்சி ஏற்­பட, விவ­சா­யம் முற்­றி­லும் பொய்த்­தது. இதன் விளை­வாக பல்­வேறு மட்­டங்­களில் பாதிப்பு ஏற்­பட, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி அள­வில் சரிவு. பண­ம­திப்பு நீக்­கம், வெந்த புண்­ணில் வேலைப் பாய்ச்­சி­யது.

இந்­திய, ஜி.டி.பி.,யில், 40 சத­வீத பங்­க­ளிப்பு செய்­வது முறை­சாரா தொழில்­கள். அவை பெரும்­பா­லும் ரொக்­கப் பரி­மாற்­றத்­தையே அடிப்­ப­டை­யாக கொண்­டவை. இவற்­றில் பெரும்­பா­லும் ஊரக, சிறு­ந­க­ரப் பகு­தி­க­ளி­லேயே இயங்­கு­வது கண்­கூடு. பண­ம­திப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ஏற்­க­னவே விவ­சா­யத்­தால் நொடிந்து போன­வர்­களை மேலும் சிர­மப்­ப­டுத்­தி­யது. இவை­யெல்­லா­மும் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி சரி­வுக்கு முக்­கிய கார­ணங்­கள் ஆகின்றன.

என்ன செய்­ய­லாம்?இரண்டு, மூன்று முனை­க­ளி­லி­ருந்து வளர்ச்சி வேகத்தை துரி­தப்­ப­டுத்த வேண்­டும். முத­லில் வட்டி விகி­தங்­கள். ரிசர்வ் வங்கி கவர்­னர் உர்­ஜித் படேல் மற்­றும் நிதி ஆலோ­ச­னைக் குழு­வின் முக்­கிய குறிக்­கோ­ளாக இருப்­பது நிதிப் பற்­றாக்­கு­றை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தான். மொத்த ஜி.டி.பி.,யோடு ஒப்­பி­டும்­போ­தும் நிதிப் பற்­றாக்­கு­றையை, 3.2 சத­வீத அள­வில் கட்­டுக்­குள் வைக்க வேண்­டும் என்­பது அவர்­க­ளது எண்­ணம்.நிதிப் பற்­றாக்­கு­றை­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யில், தொழில் வளர்ச்­சியை காவு கொடுக்­கப்­ப­டக் கூடாது.

அக்­டோ­ப­ரில் வரக்­கூ­டிய ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் குழுக் கூட்­டத்­தில் மேலும், 1 சத­வீத அள­வுக்கு, ‘ரெப்போ’ வீதம் குறைக்­கப்­பட வேண்­டும் என்­பது நிபு­ணர்­கள் கருத்து. கால் சத­வீ­தம், அரை சத­வீ­தம் அல்ல, முழு­மை­யாக, 1 சத­வீ­தம் வேண்­டும். இத­னால், வங்­கி­க­ளி­லி­ருந்து கிடைக்­கும் கடன் தொகைக்­கான வட்­டி­யும், இதர வட்டி விகி­தங்­களும் பெரு­ம­ளவு குறை­யக் கூடும்.இத­னால், இன்று சோர்ந்து போயி­ருக்­கக்­கூ­டிய தொழில் துறை­யி­ன­ருக்கு, பெரிய டானிக் கிடைக்­கும். ஏற்­க­னவே, வாராக் கடன் பிரச்­னை­யில் தத்­த­ளிக்­கும் வங்­கித் துறை­யும், தமது பயங்­க­ளை­யும், தயக்­கங்­க­ளை­யும், தாம­தங்­க­ளை­யும்கைக­ழு­வி­, தொழில் கடன் வழங்­கு­வ­தில் முனைப்பு காட்ட வேண்­டும்.

நிதிப் பற்­றாக்­குறை இந்த ஆண்டு, 3.5 சத­வீ­த­மும், அடுத்த ஆண்டு, 4 சத­வீத அள­வுக்கு உயர்ந்­தா­லும் பர­வா­யில்லை. உற்­பத்­திப் பெருக்­க­மும், வேலை­வாய்ப்­பு­களும், செல்வ வள­மும் பெரு­கிய பின், அதை மீண்­டும் கட்­டுக்­குள் கொண்டு வந்­து­வி­ட­லாம் என்­பது நிதி ஆலோ­ச­கர்­களின் கருத்து. தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்கு, இந்­தி­யா­வில் தொழில் செய்­வது லாப­க­ர­மா­னது என்­பதை மீண்­டும் நிறுவ வேண்­டும். அத­னால், நிறு­வன வரியை, 10 சத­வீ­த­மாக குறைக்க வேண்­டும்.

இவை மட்­டுமே போதுமா? இதன் மூலம், நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து அர­சுக்கு வரும் வரி வரு­வா­யும் பெரு­கும், அதே­ச­ம­யம், அவர்­க­ளு­டைய முத­லீ­டு­க­ளுக்கு கிடைக்­கும் லாபத்­தின் அள­வும் உய­ரும்.மூல­தன ஆதாய வரி முற்­றி­லும் நீக்­கப்­பட வேண்­டும். இத­னால், மூல­த­னப் புழக்­கம் அதி­க­ரிக்­கும். ஜி.எஸ்.டி., வரி விகி­தத்­தில் உள்ள பல்­வேறு அடுக்­கு­களை நீக்கி, ஒரே அடுக்­கில் கொண்டு வர வேண்­டும். இதன் மூலம், தேவை­யற்ற கணக்­கீட்­டுக் குழப்­பங்­கள் தீர்க்­கப்­படும்.

நடப்பு நிதி­யாண்­டில், பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் ஏற்­படும் தாக்­கத்தை தடுக்க, ரயில்வே, வங்­கி­கள் உள்­ளிட்ட துறை­களில் ஊக்­கு­விப்பு திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வது குறித்து அரசு பரி­சீ­லிப்­ப­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்ளன. இதற்கு, 50 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை ஒதுக்­கப்­படும் என்­றும் தெரி­கிறது. இதன் மூல­மும் பொரு­ளா­தார வளர்ச்சி வேகம் பெறும்.சில சம­யங்­களில் நான்கு மாட வீதி­களில் தேர் போகும்­போது, எங்­கே­னும் முட்­டிக்­கொண்டு நின்­று­வி­ட­லாம். திட்­ட­மிட்டு, நவீன கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்தி, ஊர் கூடி, மீண்­டும் ரதத்தை ஓட­ வைப்­ப­தற்கு அனைத்து முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­படும். இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத் தேரின் நிலை­யும் இப்­போது அப்­ப­டித்­தான் இருக்­கிறது. ஊர் கூடி தேர் இழுப்­போம்.

-ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)