பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் விபரங்கள் அளிக்கும் நடைமுறை ஒத்தி வைப்புபங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் ... ... அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விரும்­பி­ய­வற்றை பெறு­வ­தற்­கான வழிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2017
01:12

நீங்கள் விரும்பும் எல்­லா­வற்­றையும் பெறலாம் என ஊக்­கு­விக்கும் வகையில், வெற்­றி­க­ர­மாக சொந்த வர்த்­த­கத்தை துவக்கி நடத்­திய சுய அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில், கற்­றதை மற்­ற­வர்­க­ளுக்­கான வழி­காட்­டு­த­லாக, ‘எனிதிங் யூ வான்ட்’ புத்­த­கத்தில் டெரேக் சைவர்ஸ் விவ­ரிக்­கிறார்:

பெரும்­பா­லா­னோ­ருக்கு தாங்கள் செய்­வதை ஏன் செய்து கொண்­டி­ருக்­கிறோம் என தெரி­ய­வில்லை. அவர்கள் மற்­ற­வர்கள் செய்­வதை நக­லெ­டுக்­கின்­றனர். தங்கள் சொந்த வழியை காணாமல், மற்­ற­வர்­களின் பாதையில் செல்­கின்­றனர்.தங்­களை மகிழ்ச்­சியில் ஆழ்த்­தாது என தெரி­யாமல், தங்­களுக்கு தேவை என, மற்­ற­வர்கள் ஒப்­புக்­கொள்ள வைத்­ததை, பல ஆண்­டு­க­ளாக தேடிக் கொண்­டு இ­ருக்­கின்­றனர். உங்­களை மகிழ்ச்­சியில் ஆழ்த்­தக்­கூ­டி­யது எது என்­பது தொடர்­பான தனிப்­பட்ட தத்­துவம் உங்­க­ளுக்கு தேவை.

வர்த்­தகம் என்­பது பணம் அல்ல: அது தனக்கும் மற்­ற­வர்­க­ளுக்கும் கனவை நினை­வாக்கி கொள்­வதாகும். ஒரு நிறு­வ­னத்தை நடத்­து­வது என்­பது, உங்­களை மேம்­படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், உலகை மேம்­ப­டுத்­து­வ­தாகும். எந்த வர்த்­தக திட்­டமும் எளி­தாக இருக்க வேண்டும். மற்­றவை எல்லாம் நுணுக்­கங்­களில் இருக்­கி­றது. நம்­மிடம் பல ஐடி­யாக்கள் இருக்­கலாம். அவை வர­வேற்பு பெறாத போது, மாற்றம் செய்து மேம்­ப­டுத்த வேண்டும். இது தான் எனக்குத் தேவை என, பலரும் கூறினால், அந்த சேவையை தொட­ரலாம். இல்லை எனில் விட்டு விடலாம். பூட்­டிய கத­வுகள் மீது மோது­வதில் காலத்தை செல­விட வேண்டாம்.

அதே போல் உங்­க­ளுக்கு வரும் வாய்ப்­புகள் உற்­சா­கத்தில் ஆழ்த்­த­வில்லை எனில், தயங்­காமல் மறுத்து விடுங்கள். மற்­ற­வர்கள் எதிர்­பார்ப்பில் இருந்து புரிந்து, தேவை எனில் உங்கள் திட்­டத்தில் மாற்றம் செய்­யுங்கள்.உங்கள் வர்த்­த­கத்தை விட வாடிக்­கை­யா­ளர்கள் மீது கவனம் செலுத்­துங்கள். எல்லா வர்த்­த­கமும் ஒரு தீர்வை அளிக்­கவே செயல்­ப­டு­கின்­றன. அந்த தீர்­வுக்கு தேவை இல்லை எனில் வர்த்­த­கமும் தேவை­யில்லை தான். எனவே தீர்வு காண்­ப­தற்­கான பிரச்­னை­களை தேடுங்கள்.

உங்­க­ளுக்கு பணம் தேவை­யில்லை எனும் எண்­ணத்தில் வர்த்­த­கத்தை துவக்­குங்கள். அப்­போது வாடிக்­கை­யா­ளர்கள் தேடி வருவர். மோச­மான எதிர்­வி­னை­களால் கவ­லைப்­பட வேண்டாம் . அவை மோச­மான மன­நி­லையின் விளை­வாக அமைந்­தி­ருக்­கலாம். சிறிய விஷ­யங்கள் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தலாம். எனவே சின்ன சின்ன விஷ­யங்­க­ளிலும் கவனம் செலுத்­துங்கள். மற்­ற­வர்­க­ளிடம் பொறுப்பை ஒப்­ப­டைக்கும் போது நம்­பிக்கை வையுங்கள், ஆனால் அதற்கு முன் உறுதி செய்து கொள்­ளுங்கள். பொறுப்­பு­களை ஒப்­ப­டை யுங்கள், ஆனால் முழு­வதும் விட்டு­வி­லகி விடா­தீர்கள்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 02,2017
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)