பதிவு செய்த நாள்
07 அக்2017
00:08
மும்பை : ரஹஜா குழுமத்தின், ஹைப்பர்சிட்டி நிறுவனத்தை, கிஷோர் பியானியின், பியூச்சர் குழுமம் கையகப்படுத்த உள்ளது.
ஹைப்பர்சிட்டிக்கு, நாடு முழுவதும், ஆடைகள், உணவுகள், பேஷன் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும், 20 கடைகள் உள்ளன. கிஷோர் பியானியின், பியூச்சர் குழுமம், பிக் பஜார் கடைகள் மூலம், சில்லரை விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனம், ஹைப்பர்சிட்டியை, 655 கோடி ரூபாயில் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. கையகப்படுத்துதல் தொடர்பாக, பங்கு முதலீட்டாளர்களிடம் ஒப்புதல் பெற, நவ., 3ல், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை, பியூச்சர் குழுமம் கூட்டி உள்ளது.
அடுத்த, 3 – 5 மாதங்களுக்குள், நிறுவனங்களின் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சில்லரை விற்பனை பிரிவில், ஹைப்பர்சிட்டி, தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவதால், விற்பனை செய்யப்படுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|